இரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்
திருச்சி அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி: கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பை கண்டு அதிர்ந்து போனார் இளம்பெண்.. கல்யாணம் ஆகி 9 மாசத்துலேயே கணவரின் வண்டவாளம் தெரிந்துவிட்டதால், தீக்குளித்து இறந்துவிட்டார்.
திருச்சி, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் விஷ்ணு.. 25 வயதாகிறது.. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கும், நீலவேணி என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் கல்யாணம் நடந்தது. நீலவேணிக்கு 19 வயசு... விஷ்ணுவின் முறைப்பெண் இவர்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு திருச்சி ஏர்போர்ட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவா் விஷ்ணு வீட்டுக்கு வந்திருந்தார்.. விஷ்ணுவை நான் ஏற்கனவே கல்யாணம் செய்திருக்கிறேன்.. அதனால், இனிமேல் நான் உங்களுடன்தான் தங்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ந்த நீலவேணி, பெற்றோரிடமும், உறவினர்களிடமும் இதை பற்றி சொன்னார்.. அவர்களும் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதன் உண்மை தன்மையும் அவர்களுக்கும் புரியவில்லை.
ஆனால் தன்னை ஏமாற்றி விட்டாரே என நினைத்து நீலவேணி மட்டும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.. நேற்று முன்தினமெல்லாம் அழுது கொண்டிருந்தார்.. உறவினா்கள் அவரைத் தேற்றியும் சமாதானம் செய்து தூங்க வைத்தனா்.
என்றாலும் அதிலிருந்து நீலவேணியால் மீள முடியவில்லை... இந்நிலையில், விடிகாலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினா் ஓடிச்சென்று தீயை அணைத்து அவரை மீட்க முயன்றனா். ஆனால் நீலவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து எடமலைப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள் பெண் இறந்ததால், இதுகுறித்து ஆர்டிஓ தனி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications