கிணற்றை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு.. தூத்துக்குடியில் சோக சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாளமுத்தூர் பகுதியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த உறைக் கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 2 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்தூர் நேரு காலணி நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் ஒரு உறை கிணறு ஒன்று உள்ளது. இந்த உறைக் கிணறானது நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிணற்றை சுத்தம் செய்ய கணேசன் முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தனது உறவினர்களான மாரிமுத்து மற்றும் பவித்திரம் ஆகியோரை அழைத்துள்ளார். அதன்பேரில் இன்று மாரிமுத்து என்பவர் தன்னுடன் 2 பேரை அழைத்து வந்துள்ளார். முதலில் அந்த கிணற்றை தூர்வாருவதற்காக மாரிமுத்து உள்ளே இறங்கியுள்ளார். அவர் இறங்கி வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் மேலே இருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து வீட்டு உரிமையாளர் கணேசன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். உள்ளே இறங்கிய கணேசனும் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து பவித்ரன் மற்றும் இன்னொருவருவர் இருவரையும் தேடி உள்ளே சென்றுள்ளார். மேலும் வெளியில் சில உறவினர்களுக்கு எதாவது சத்தம் கேட்டால் உதவி செய்யுமாறு கூறி கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் உள்ளே இறங்கியதும் விஷவாயு தாக்கியுள்ளது. இதையடுத்து அவர்கள் சத்தமிடவே மேலே இருந்தவர்கள் அவர்கள் இரண்டு பேரையும் மீட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்தனர். இதில் முதலில் கிணற்றுக்குள் இறங்கிய மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உறைக்கிணற்றில் இறங்கி சுத்தம் செய்ய முயன்ற போது இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications