குலசை முத்தாரம்மன் கோவிலில் 2- வயது பெண் குழந்தை கடத்தல்.. போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி: தசரா திருவிழாவை ஒட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து இருந்த நாடோடி பழங்குடியின பெண்ணின் 2-வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குழந்தையை கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் குலசேகரன் பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் களை கட்டும். கோ தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அம்மனுக்கு விரதம் இருந்து திருக்காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். உடன்குடி, குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வேடம் அணிந்து இறுதி நாளான 10 ஆம் நாள் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்வார்கள்.
10 ஆம் நாளில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தான் குலசேகரன்பட்டினத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நாடோடி பழங்குடியின பெண்ணின் குழந்தையான கார்த்திகா வள்ளி கடத்தப்பட்டு உள்ளது.
நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அம்சவள்ளி என்ற பெண், தனது கைக்குழந்தையுடன் குலசேகரன்பட்டினத்தில் தங்கி ஊசி, பாசி உள்ளிட்டவற்றைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு அம்சவள்ளி தனது 2-வயது குழந்தையை அருகில் படுக்க வைத்து விட்டு தூங்கியுள்ளார். காலையில் விழித்து பார்த்த போது தனது குழந்தையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அம்சவள்ளி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தையை கடத்தி சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின் போது 2-வயது குழந்தை கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் குலசேகரன்பட்டினம் கோவில் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications