சைக்கோ ரேப்பிஸ்ட்.. 6 முதல் 60 வரை.. பைத்தியக்காரனாக நடித்தே.. ஒருத்தரையும் விடாத அருள்ராஜ்!

சிறுவனை பலாத்காரம் செய்து கொன்ற நபரை கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சைக்கோ ரேப்பிஸ்ட்.. இந்த கொடூரனை இப்படித்தான் சொல்ல வேண்டும்.. பாலியல் கொலைகளை செய்துவிட்டு... தூத்துக்குடி மாவட்டம் முத்தலாபுரம் அருகே 60 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு மன நோயாளி போல நடித்து தப்பிய இளைஞன் ஒருவன், தற்போது 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்தும் மிதித்தும் கொலை செய்ததாக போலீசில் சிக்கி உள்ளான்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு முத்தாலபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். 23 வயசுதான்.. கூலி தொழிலாளி.. ஆரம்பத்தில் இருந்தே இவர் ஒருமாதிரி.. நடப்பது, பேசுவது, செயல்படுவது எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.. அதனால் அந்த ஊர்க்காரர்கள் இவரை பெரிதாக கண்டுகொள்வதே கிடையாது.

இந்நிலையில் 6 வயது சிறுவன் தெருவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.. ஆனால் அவனை திடீரென காணோம்.. விசாரித்ததில், அருள்ராஜ்தான் அழைத்து சென்றதாக சிலர் சொன்னார்கள்.. அதனால் போலீசார் விசாரித்தனர். அப்போது, "நான் போகும்போது என் பின்னாடியே வந்தான்.. என்னை ஃபாலோ செய்தே வந்ததால் எனக்கு ஆத்திரம் வந்துடுச்சு.. அதனால ஆத்திரத்தில் அவனை காலால் மிதிச்சிட்டேன்.. அவனம் இறந்துவிட்டான்" என்றார் கூலாக.

சைக்கோ

சைக்கோ

போலீசார் இதை நம்பாமல் திரும்ப திரும்ப கேட்டனர்.. அப்போதும் இதே பதிலைதான் அருள்ராஜ் சொல்லி கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில் சைக்கோ போல நடிக்க ஆரம்பிக்கவும்.. போலீசார் குழம்பியே விட்டனர்... இதனிடையே சிறுவனினை தேடும் படலமும் ஆரம்பித்தது.. அப்போது சிறுவனின் சடலம் விழுந்து கிடக்கும் இடத்தை அருள்ராஜ் சொல்லவும் பதறியடித்து கொண்டு ஓடினர்.. அங்கு நிஜமாகவே சிறுவனின் சடலம் விழுந்து கிடந்தது.. அவனது கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தன.

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

6 வயது சிறுவனை அருள்ராஜ் ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற குழப்பம் அதிகமானது. உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டடது.. அப்போது சிறுவனை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு பிறகு போலீசார் தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர்.. போட்ட போடில், பைத்தியம்போல நடித்து கொண்டிருந்த அருள்ராஜ் அலறினார்.. வேஷமும் கலைந்தது.

கொலை

கொலை

"ஆமாம்.. விளையாடிட்டு இருந்தவனை நான்தான் கடத்தி சென்றேன்.. அவனை என் ஆசைக்கு இணங்க சொன்னேன்.. வற்புறுத்தி மிரட்டினேன்.. ஆனால் அவன் கத்தி கொண்டே இருந்தேன்.. அந்த ஆத்திரத்தில் கழுத்தை மிதித்தும், கழுத்தை அறுத்தும் கொன்றேன்.." என்றார்.

அருள்ராஜ்

அருள்ராஜ்

இப்போது போலீசார் அருள்ராஜ் குறித்த மொத்த தகவலையும் திரட்டி வருகின்றனர். 3 வருடத்துக்கு முன்பு 60 வயது பாட்டியையும் இதே அருள்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. பாட்டி சத்தம் போடவும், அவரையும் கொன்று தீர்த்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.. இதைதவிர, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எட்டயபுரம், மாசார்பட்டி, கோவில்பட்டி போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

வாக்குமூலம்

வாக்குமூலம்

பைத்தியம் போல நடித்தாலும்.. சின்னஞ்சிறு சிறுவனையும் விட்டு வைக்கவில்லை.. வயதான கிழவியையும் விடவில்லை.. இந்த சைக்கோ ரேப்பிஸ்ட்.. இப்போது இவரது பல கொடூரங்களும் வெளி வந்தவண்ணம் உள்ளபடியே இருப்பதால் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+