தூத்துக்குடியில் கொடுமை.. ரோட்டில் நடந்து போன பெண்ணை பலாத்காரம் செய்த ரவுடி.. இப்போ மாவுகட்டு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை, கத்தி முனையில், இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் கட்டை முருகன். ரவுடியான இவர் மீது, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது நண்பரான அழகேசபுரத்தைச் சேர்ந்த கோகுல்ராம் என்பவருடன், இருசக்கர வாகனத்தில் தாளமுத்துநகர் பகுதிக்குச் கட்டை முருகன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக 40 வயது பெண் ஒருவர், தன்னுடைய வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

பெண் கடத்தல் - பலாத்காரம்
இதனைக் கண்ட ரவுடி கட்டை முருகனும், கோல்குல்ராமும், சாலையில் நடந்துச் சென்ற அந்தப் பெண்ணை கத்தியைக் காட்டி, வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணை, தருவைக்குளம் கல்மேல்ட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு இழுத்துச் சென்று, ரவுடி கட்டை முருகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறுப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணை, இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, அவரின் வீட்டருகில் உள்ள சந்திப்பில் விட்டு விட்டு, ரவுடி கட்டை முருகன் அங்கிருந்து சென்றுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
இதனிடையே, ரவுடி கட்டை முருகனின் நண்பரான கோகுல்ராம், அந்தப் பெண்ணை, செல்ஃபோனில் தொடர்புகொண்டு, தான் இருக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்தாக கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு கோகுல்ராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அந்தப் பெண், உடனடியாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.

தனிப்படை அமைப்பு
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

கீழே விழுந்த ரவுடி
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, தாளமுத்துநகர் பகுதியில் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி 500 ரூபாயை ரவுடி கட்டைமுருகன் பறித்துள்ளார். மேலும், போலீசாரைக் கண்டதும், அங்கிருந்து வேகமாக தனது இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ரவுடி கட்டை முருகன் கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரவுடிக்கு மாவுகட்டு
இதனைத்தொடர்ந்து, ரவுடி கட்டை முருகன் மற்றும் அவரது நண்பர் கோகுல்ராம் ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்ட ரவுடி கட்டை முருகனுக்கு, போலீசார் மாவுகட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications