விடிவு பிறக்குமா .. தாமிரபரணி ஆற்றை நேரில் பார்வையிட்ட கனிமொழி எம்பி.. தந்த உறுதி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: வெள்ளம் பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் போல் இல்லாமல். குறைவான அளவிலேயே தண்ணீர் வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வருடம் தோறும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

Recommended Video

    விடிவு பிறக்குமா .. தாமிரபரணி ஆற்றை நேரில் பார்வையிட்ட கனிமொழி எம்பி.. தந்த உறுதி!

    தூத்துக்குடி மக்களின் தந்தை எனப் போற்றப்படும் ராம்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 152 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அப்போது சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, "தூத்துக்குடி தந்தையாக போற்றக்கூடிய குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று உறுதி தரப்பட்டது அந்த உறுதியின் படி, குரூஸ் பர்னாந்து அவர்களின்152 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மணிமண்டபம் கட்டித் தரப்படும் என்று அறிவித்தள்ளார். தூத்துக்குடி மக்கள் சார்பில் இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் குரூஸ் பர்னாந்து சிலை இடத்திலேயே மணிமண்டபம் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் என்றார்.

    10 ஆயிரம் கனஅடி

    10 ஆயிரம் கனஅடி

    இதனிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாபநாசம், சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று 10ஆயிரம் கன அடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டுள்ளது.

    நேரில் ஆய்வு

    நேரில் ஆய்வு

    தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது.
    இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டு பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    போகவேண்டாம்

    போகவேண்டாம்

    அப்போது அவர் கூறும் போது, "பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் நேற்றைய தினம் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேமிக்க நடவடிக்கை

    சேமிக்க நடவடிக்கை

    மேலும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் போல் இந்த வெள்ளம் இல்லாமல் குறைவான அளவிலேயே தண்ணீர் வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வருடம் தோறும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+