திருச்செந்தூரில் தற்செயலாக சூரியை சந்தித்த ரம்யா பாண்டியன்.. பார்த்ததுமே கொடுத்த ரியாக்ஷன்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் நடிகர் சூரியை தற்செயலாக சந்தித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.. சூரியை பார்த்ததுமே அருகில் சென்று அவர் கொடுத்த ரியாக்ஷனை பற்றி பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகனை தரிசிக்க எப்போதுமே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில், பலரும் திருசெந்தூருக்கு படை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நடிகர் சூரி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று வருகை தந்தார்.
கோவில் அருகே ஆட்டோவில் வந்த சூரி திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை தரிசனம் செய்தார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் சூரியுடன் கோவில் பணியாளர்கள், பாதுகாவலர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் புகைப்படம் எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர்.

அப்போது தற்செயலாக பிக்பாக்ஸ் புகழ் நடிகை ரம்யா பாண்டியன் , தனது கணவர் லோவல் தவானுடன் அங்கு வந்தார். நடிகை ரம்யா பாண்டியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. நடிகை ரம்யா பாண்டியன் சூரியை பார்த்ததுமே சிரித்தபடி அருகில் சென்று அரவணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தனது கணவருடன் இணைந்து சூரியுடன் ரம்யா பாண்டியன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின்னர் சூரி ஆட்டோவில் ஏறி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ரம்யா பாண்டியன் கோவிலுக்குள் சென்று, மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். பின்னர் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார்கள். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார் ரம்யா பாண்டியன்.

அதன்பின்னர் சூரி ஆட்டோவில் ஏறி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ரம்யா பாண்டியன் கோவிலுக்குள் சென்று, மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். பின்னர் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார்கள். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார் ரம்யா பாண்டியன்.

முன்னதாக சூரி திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தபின் பேசுகையில், "தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக கங்குவா படம் இருக்கிறது என்றார். வாரந்தோறும் நெகட்டிவாக சொன்னால் பிரபலமாகலாம் என எண்ணி, சிலர் கேமரா முன்பாக இப்படி பேசி வருவதாகவும் சூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications