கனிமொழிக்கு எதிராக அஜிதாவா? அப்ப தூத்துக்குடியில் தவெக இறக்கப்போகும் 'துருப்புச் சீட்டு' இவர்தானா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கிரவுண்ட் லெவல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்புப் பணிகள் தற்போது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன... அந்த தொகுதியில் தவெக நிலவரம் என்ன?

தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் தூத்துக்குடி மாவட்டத்தில், தவெக தற்போது பூத் கமிட்டி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Ajitha vs Kanimozhi

ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி என அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில் காலூன்ற, தவெக கடலோர கிராமங்களில் மீனவர் ஆதரவை ஒருங்கிணைப்பதும், நகர்ப்புறங்களில் இளைஞர் சக்தியை திரட்டுவதும் போன்ற உத்திகளை கையாண்டு வருகிறது.

தூத்துக்குடி தவெக

மேலும், ஸ்டெர்லைட் விவகாரம், துறைமுக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற உள்ளூர் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து தனது பிரச்சாரத்தை வடிவமைத்து வருகிறது.

கட்சி ஒருபுறம் வளர்ச்சி பாதையில் நகர்ந்தாலும், தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா அக்னல் விவகாரம் தவெக-விற்கு உட்கட்சி ரீதியாகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது..

கட்சியின் ஆரம்பகால உழைப்பாளராக அறியப்பட்ட அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததை கண்டித்து பனையூரில் கட்சித் தலைவரின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதும், அதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சியும் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன..

அஜிதா அக்னல் விவகாரம்

அஜிதா மீது சுமத்தப்படும் நிதி வசூல் புகார்கள் மற்றும் ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகளே அவருக்கு பதவி மறுக்கப்பட்டதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஒரு புதிய கட்சியாக, தூய்மையான பிம்பத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பும் விஜய், இத்தகைய சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு பொறுப்புகளை வழங்கத் தயங்குவது வெளிப்படையாகத் தெரிகிறது.

அரசியல் முதிர்ச்சியை விட உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள், அஜிதா போன்ற நிர்வாகிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். கட்சி விசுவாசத்தை விட நம்பகத்தன்மைக்கே முன்னுரிமை என்ற தலைமையின் கறாரான நிலைப்பாடு, மற்ற நிர்வாகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


விருப்ப மனு தந்தது உண்மையா

இப்படிப்பட்ட சூழலில் அஜிதா குறித்த ஒரு செய்தி இணையத்தில் கசிந்தபடியே உள்ளது.. அதாவது உடல்நலம் தேறி, மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம் அஜிதா.. மேலும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஏனென்றால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவுமே இதுகுறித்து வெளிவரவில்லை..

எனினும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறும்போது, "தூத்துக்குடியில் அஜிதா அக்னல் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்று, தன்னுடைய மீதான புகார்களை துடைத்தெறிந்தால்தான் 2026 தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்; இல்லையெனில் அது எட்டாக்கனியாகவே இருக்கும்" என்கிறார்கள்..

கனிமொழி கருணாநிதி

சி.த. செல்லபாண்டியன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியின் ஆசீர்வாதத்துடன், அதிமுக மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடும் என்று கூறியிருந்தார்.. அதேபோல், தூத்துக்குடி என்றாலே கனிமொழி கருணாநிதியையே தங்களின் வேட்பாளராக களமிறக்கும் என்பது திமுக வட்டாரத்தின் நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.. அப்படியிருக்கும்போது, தவெக தூத்துக்குடி தொகுதியை எப்படிச் சமாளிக்கப் போகிறது? என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..

தவெக-வின் பெரும் பலமே அதன் இளைஞர் பட்டாளமும், ரசிகர் மன்றக் கட்டமைப்பும்தான்.. ஆனால், அஜிதா அக்னல் போன்ற உட்கட்சி விவகாரங்களை தலைமை எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்தே, பொதுமக்களிடையே கட்சியின் மீதான நம்பகத்தன்மை உயரும்.

தூத்துக்குடியில் தவெக ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமானால், சர்ச்சைகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமான மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+