தடுமாறி விழுந்த அன்புமணி.. திருச்செந்தூர் கோவில் துலாபாரத்தில் என்ன நடந்தது? அர்ச்சகர் செய்த தவறு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஆடி அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனது எடைக்கு எடை நிகராக அரிசியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சவுமியா அன்புமணி வழங்கினர். இந்த வேளையில் அன்புமணி ராமதாஸ் லேசாக நிலைத்தடுமாறி தராசு தட்டில் விழுந்தார்.

இன்று ஆடி அமாவாசை.. இன்றைய தினம் ஏராளமான மக்கள் புனித ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா அன்புமணியுடன் திருச்செந்தூர் கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.

tiruchendur anbumani ramadoss


இவர்கள் காரில் கோவிலுக்கு வந்தனர். முதலில் அன்புமணி ராமதாசும், சவுமியா அன்புமணியும் கடலுக்கு சென்றனர். கடலில் கால்களை நனைத்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் கோவிலில் துலாபாரம் கொடுத்தனர்.

துலாபாரம் என்பது தங்களின் எடைக்கு எடையாக வேண்டுதல்களுக்கு ஏற்ப கோவில்களுக்கு பொருட்களை வழங்கும் முறையாகும். அந்த வகையில் அன்புமணி ராமதாஸ் - சவுமியா அன்புமணி ஆகியோர் தங்களின் எடைக்கு நிகராக அரிசியை துலாபாரமாக வழங்கினர். துலாபார தராசின் ஒரு தட்டில் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அமர அவர்களின் எடைக்கு ஏற்க மற்றொரு தட்டியில் அரிசி வைக்கப்பட்டு துலாபாரம் கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர்கள் 2 பேரும் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் மூலவர், சண்முகர், குருபகவான் சன்னதியில் வழிபட்டும், சத்ரு சம்ஹார யாகம் வளர்த்தும் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அன்புமணி ராமதாஸ் துலாபாரம் கொடுத்தபோது நிலைத்தடுமாறி விழும் காட்சி அதில் உள்ளது.

அதாவது துலாபாரத்துக்கான தராசில் ஒரு பகுதியில் அன்புமணி ராமதாஸை அர்ச்சகர் அமர வைத்தார். அப்போது தராசின் மறுபுறம் தட்டு காலியாக இருந்தது. அந்த தட்டை யாரும் தாங்கியும் பிடிக்கவில்லை. இதனால் அன்புமணி ராமதாஸ் தராசின் ஒரு தட்டில் அமர முயன்றபோது சட்டென கீழே சென்றது.

ஆடி அமாவாசை! திருச்செந்தூர் முருகன் கோயில் துலாபாரத்தில் அரிசி காணிக்கை வழங்கிய அன்புமணி- சவுமியா


இதனால் அன்புமணி நிலைத்தடுமாறி தராசு தட்டின் மீது விழுந்தார். அதன்பிறகு அருகில் இருந்தவர் உதவியுடன் அன்புமணி சுதாரித்து கொண்டு அரிசி மூடைகளை துலாபாரம் வழங்கினார். அதன்பிறகு சவுமியா அன்புமணி தராசு தட்டில் அமர்ந்து அரிசி மூடைகளை துலாபாரமாக வழங்கினார்.

மேலும் ஆடி அமாவாசையொட்டி இன்று பலரும் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், குற்றாலம் உள்பட பல இடங்களில் பொதுமக்கள் இன்று வழக்கத்தை விட அதிகமாக கூடி தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+