"ஒரு பக்கம் ஆன்மீக பயணம்.. மறுபுறம் கூட்டணி குறித்து பரபர.." எடப்பாடி பழனிசாமி போடும் அரசியல் கணக்கு
தூத்துக்குடி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஒரு பக்கம் திருச்செந்தூர் கோயிலில் வழிப்பட்ட நிலையில், மறுபுறம் தேர்தல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்வதற்காக தூத்துகுக்குடி விமானம் நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் திரண்டு இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் கட்சியினர் போஸ்டர்களையும் அடித்து இருந்தனர். நாளிதழ்களில் அதிமுக நிர்வாகிகள் பலரும் எடப்பாடியை வரவேற்று விளம்பரமும் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வருகை தந்து இருந்த அதிமுகவின் இரு பிரிவினரிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்களுக்கும் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சீனி ராஜுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சீனிராஜ் அதிமுகவில் இருந்து 8 மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்டதாகவும் இன்று எடப்பாடியை வரவேற்று அவர் அளித்த விளம்பரத்தில் கடம்பூர் ராஜூ புகைப்படம் இடம் பெற்றதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அரசியல் கணக்கு: அதேநேரம் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி அடுத்தாண்டு மக்களவை தேர்தல் குறித்தும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் குறித்து சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தியிருந்தார்.
அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்பது போலச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்படிக் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications