பெண்களுடன் அன்னையர் தினம், பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரத்தில் பெண்களுடன் அன்னையர் தினத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டாடினார்.
ஒட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், வல்லநாடு, செக்காரக்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில் சிலரது சூழ்ச்சியால் இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். உங்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக, எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை கட்டிக் காத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
நான் தொண்டனாக இருந்துதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நீங்கள் போடும் கட்டளையை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் தலைவர் என்ற கர்வம் பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறார். டி.டி.வி.தினகரன் எப்படியாவது கட்சியை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து ஆதாயம் தேட வேண்டும் என்று துடிக்கிறார்.
மதுரையில் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நான் சிவப்பாக இருக்கிறேன். கவர்ச்சியாக இருக்கிறேன். தற்போது 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ததால் கருப்பாகிவிட்டதாக மக்களிடம் பேசுகிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் நாட்டுக்கு என்ன செய்வார்கள்? என முதல்வர் கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் செக்காரக்குடி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் பழனிச்சாமி.
அப்போது செக்காரக்குடி கிராம பெண்கள் மற்றும் வயதான பெண்களுடன் இணைந்து அன்னையர் தினத்தையும் தனது 65-ஆவது பிறந்தநாளையும் கொண்டாடினார். பின்னர் கேக் வெட்டி அவர்களுக்கு வழங்கினார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications