Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி தங்க நகைகள் மாயம்.. மக்கள் செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 29 கோடி மதிப்பிலான நகை பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு வங்கி மேலாளரை வங்கிக்குள் செல்லவிடாமல் தடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி, போராடியவர்களை கலைந்து போக செய்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மக்களின் 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானதாகத் தெரியவந்தது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும் இருப்பில் இருப்பது போன்று போலியாகக் கணக்கை உருவாக்கி ரூபாய் 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்ததாகத் தெரியவந்துள்ளது.

crores of gold ornaments went missing from the Tiruchendur Cooperative Bank

இதேபோல் வைப்பு நிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாகக் கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி என மொத்தமாக 29 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை இதை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் தங்களது நகை மற்றும் பணத்திற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு வருகை தந்த வங்கி மேலாளரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட எங்களுடைய நகை மற்றும் பணத்தை வழங்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குரும்பூர் காவல்துறையினர் வருகை தந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி எஸ்பிஐ வங்கி மோசடி

கிருஷ்ணகிரி எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆந்திர மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து பல கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் இயங்கும் பாரத் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தங்க நகை மதிப்பீடியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ம்தேதி முதல் குணசேகரன் காணவில்லை என்று அவரது மனைவி பவித்ரா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே ஆந்திர மாநிலம் குப்பம் அருகே நடுமூர் என்னும் இடத்தில் சாலையோரம் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்த உடலை ஆந்திர போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர் விசாரணையில் அவரது உடலில் ஆதார் அட்டை இருந்தது அதன்படி உயிரிழந்தவர் குணசேகரன் என போலீசார் உறுதி செய்தனர். குணசேகரன் சைனைடு சாப்பிட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் இடையே குணசேகரன் தான் பணிபுரியும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பல நபர்களின் உதவியுடன் போலி தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் பல கோடி ரூபாய் வரை பண மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. குணசேகரின் இந்த மோசடிக்கு வங்கி ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது அதன் அடிப்படையில் வங்கி உயர் அதிகாரிகள் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் அவற்றின் தரம் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+