சாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
தூத்துக்குடி: சுடலைமாட சாமிக்கு ஆட்டை பலி கொடுப்பாங்களே.. அந்த இடத்தில் வைத்து திமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தன்னுடைய அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த சமாதிக்கு சென்றபோதே, இவரையும் வெட்டி, கை, கால் என தனித்தனியாக கூறு போட்டுள்ள கொடூரம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர் விஎஸ் கருணாகரன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.
இவர் வகிக்காத கட்சியே இல்லை. ஆரம்பத்தில் பாஜக, பிறகு, அதிமுக, அதன்பின்னர்தான் திமுக. முன்னாள் எம்எல்ஏ பெரியசாமியின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்
பெரியசாமி மறைந்தபிறகு, அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஆனாலும் ஏதோ உட்கட்சி விவகாரத்தினால் தனியாக செயல்பட்டு வந்துள்ளார். கருணாகரனுக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டுவந்த திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் அகற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

அஞ்சலி
இந்த நிலையில், குலையன் கரிசலில் தன்னுடைய அப்பாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த கருணாகரன் சென்றார். அப்போது ஒரு மர்மகும்பல் கருணாகரனை மடக்கி கொண்டது. அவர்களிடம் இருந்து தப்பித்து கருணாகரன் காரை விட்டு இறங்கி ஓட முயன்றும், விரட்டி விரட்டி கடைசியில் சுடலைமாட சாமிக்கு ஆட்டை பலி கொடுக்கும் இடத்துக்கே வந்துவிட்டது.

விசாரணை
கும்பல் வளைத்து கொண்டதால் தொடர்ந்து கருணாகரனால் ஓட முடியவில்லை. அதனால் அதே இடத்தில், கருணாகரனின் கழுத்து, தலை, மார்பு என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது கும்பல். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தன.

துப்பாக்கி
தொழில், கோயில் திருவிழா எடுத்தது மற்றும் அரசியல் ரீதியான போட்டி கருணாகரனுக்கு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்பவுமே இடுப்பில் ஒரு துப்பாக்கி வைத்திருப்பாராம். அந்த துப்பாக்கியை நேற்று காணோம். இதனால் கருணாகரனை கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications