வாழ்த்து வாங்கிய வீராங்கனைகள்...காலைக் கவனித்த கனிமொழி...அடுத்த நொடி செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்த போது மாணவிகளுக்கு ஸ்போர்ட் ஷூ இல்லாதது கண்டு அவர்களை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று ஷூக்களை வாங்கித் தந்தார். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Recommended Video

    பிளாஸ்டிக் தொப்பி அணிந்து.. ஒற்றையடி பாதையில் நடந்து.. திடுதிப்பென ஏணியில் ஏறி கனிமொழி அதிரடி!

    அரசியலுக்கு வந்ததிலிருந்தே திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கனிமொழி பாட்டுக்கு தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்துக் கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி அந்த தொகுதிக்காக நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

    அதிமுக ஆட்சியிலேயே தனது அதிகாரத்திற்குள்பட்ட அனைத்தையும் செய்தார். தற்போது திமுக ஆட்சி என்றால் கேட்கவா வேண்டும்?

    சாத்தான்குளம்

    சாத்தான்குளம்

    கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன், ஜெயராஜ்- பென்னிக்ஸ் காவல் துறை காவலில் இருந்த போது காவலர்கள் கடுமையாக தாக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எப்படி குரல் கொடுத்தாரோ அதே போல் திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய தொழிலாளி போலீஸாரால் அடித்து உதைக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திலும் கண்டித்தார்.

    ஜாதி சான்றிதழ்

    ஜாதி சான்றிதழ்

    கனிமொழியை பொருத்தமட்டில் நலத்திட்டங்களை செய்வதிலும் சரி தவறுகளை சுட்டிக் காட்டி கண்டிப்பதிலும் சரி பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. தென்காசியில் பழங்குடியின மாணவிக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால் படிக்க முடியாத நிலையை அறிந்து உடனடியாக அந்த மாணவி படிப்பதற்கு கனிமொழி ஏற்பாடு செய்தார். அந்த மாணவியிடம் போனிலும் பேசி, நன்கு படிக்குமாறு கூறினார்.

    கனிமொழி

    கனிமொழி

    அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தார். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசளிக்கும் போது, sports Shoe இல்லாத மாணவிகளைக் கவனித்தார்.

    9 மாணவிகள்

    9 மாணவிகள்

    உடனடியாக Sports Shoe இல்லாத வெற்றி பெற்ற 9 மாணவிகளையும் உடன் பங்கேற்ற சக மாணவிகளையும் , அழைத்துச் சென்று, அவர்களுக்குப் பிடித்த Sports Shoe-வை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார். கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களின் இந்த செயலைக் கண்டு, மாணவிகள் நெகிழ்ந்து போய், நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள். உடன் சமூக நலன் & பெண்கள் பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார். இது சாதாரண விஷயம் இல்லை, ஷூ கூட இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் வெயிலிலும் சேற்றிலும் சகதியிலும் எத்தனை மாரத்தான் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் பயணிக்கிறார்கள்.

    தமிழ்ச் சாலை

    தமிழ்ச் சாலை

    அது போல் தூத்துக்குடி தமிழ்ச் சாலையில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத்திட்டப் பணிகளை அமைச்சர் கீதாஜெகஜீவனுடன் ஆய்வு செய்தார். அதிலும் ஒரு திட்டத்தின் கட்டடப் பணியை பார்வையிட சென்ற அவர் திடீரென அங்கிருந்த ஏணியில் அசால்ட்டாக ஏறி மேலே சென்றும் ஆய்வு செய்தார். எந்த பணியாக இருந்தாலும் தரத்தில் சமரசம் செய்து கொள்ள கூடாது என ஒப்பந்ததாரர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளார். பெண்ணாக இருந்து கொண்டு சற்றும் தயங்காமல் திடுதிப்பென ஒரு இரும்பு ஏணியில் ஏறி போய் கனிமொழி ஆய்வு செய்ததை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+