'2 முறை சொல்லியும் கேட்கல.. அதான் எமோஷனல் ஆகிட்டேன்..' சர்ச்சை வீடியோவுக்கு திமுக எம்எல்ஏ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஊழியர்கள் திட்டி பணியை நிறுத்த கூறும் காட்சிகள் வைரலான நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்

Recommended Video

    தூத்துக்குடி: பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டும் எம்.எல்.ஏ: வைரல் வீடியோ!

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளைத் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. கோவில்பட்டியில் பகுதியில் அமைந்துள்ள 10 ஊராட்சிகளில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், அரசின் விதிமுறைகளை மீறி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சில புகார்கள் எழுந்தனர்.

     விவசாயிகள் குற்றச்சாட்டு

    விவசாயிகள் குற்றச்சாட்டு

    சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த மின்சக்தி உற்பத்திக்கான பணிகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக அப்பகுதியைச் சேர்ந்த சில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.சோலார் பேனல் அமைக்கும் பணிகளின்போது நீர்வரத்து ஓடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

     திமுக எம்ல்ஏ போராட்டம்

    திமுக எம்ல்ஏ போராட்டம்

    இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற இந்த பணிகள் நடைபெற்று வருவதாக அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரசின் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்தினால் சோலார் அமைக்கப்பட்டு வருவதால் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

     வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தனியார் சோலார்‌ நிறுவனப் பணியாளர்களைத் திட்டி பணியை நிறுத்த கோரி மிரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

     விளக்கம்

    விளக்கம்

    இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பிபிசி தமிழ் நிறுவனத்திடம் அவர் கூறுகையில், "சோலார் பேனல் அமைப்பதற்காக மத்திய அரசிடம் அவர்கள் அனுமதி வாங்கியுள்ளனர். இதற்கான பணிகளை அவர்கள் சரியாகச் செய்யவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் நான் நேரடியாகச் சென்று இரண்டு முறை பேசியும் அவர்கள் அதனைச் சரிசெய்யவில்லை. அதனால் சற்று கோபப்பட்டுவிட்டேன்.

     என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    அவர்கள் மாநில அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கிவிட்டுச் செய்யட்டும். அனுமதியைப் பெறுவதற்கு பத்து நாள்கள் ஆகும். அவ்வாறு அனுமதி வாங்காமல் செய்வதால் மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும் எனக் கூறினேன். 100, 200 ஏக்கர் என நிலங்களை அந்த நிறுவனம் வாங்குவதில் தரகர்கள் சில தவறுகளைச் செய்துள்ளனர். இதனைச் சரிசெய்ய வேண்டும் எனவும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் கூறினேன். இதனை முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+