ரூ. 1000 கொடுத்தது தான் முதல்வர் செய்த நல்ல விஷயம்... கனிமொழி எம்.பி விளாசல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி பேசியதாவது, மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்.

இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் வைத்தால் வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்து, அ.தி.மு.க. அரசு தேர்தல் நடத்துவது இல்லை.
மக்கள் வைத்து இருக்கும் அத்தனை கோரிக்கைகளையும் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றி தருவோம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மது அருந்துபவர்களை அதிலிருந்து மீட்டு, படிப்படியாக டாஸ்மாக் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி எடுக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications