Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தள்ளி நிற்க சொன்னேனா? திருச்செந்தூர் கோவிலில் என்ன நடந்துச்சு தெரியுமா.. விமர்சனத்திற்கு ரோஜா பதிலடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜாவுடன் தூய்மை பணியாளர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது, தூய்மை பணியாளர்களை நோக்கி அருகில் வர வேண்டாம் அங்கேயே நில்லுங்கள் என நடிகை ரோஜா சைகை காட்டுவது போல வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது. இந்த நிலையில் இதற்கு நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் கடலோரத்தில் முருகன் கோவில் அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அதிலும் முக்கிய விஷேச நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பல மணி நேரம் காத்திருந்து தான் சாமி தரிசனம் செய்ய முடியும்.

actress roja tiruchendur temple

அந்த வகையில் இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 15 ஆம் தேதி அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஆனி வருஷ அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனி வருஷ அபிஷேக நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட பிரபல நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் வந்து இருந்தார்.

ரோஜா சாமி தரிசனம் முடித்து வெளியே வரும்போது, அங்கே நின்றிருந்த மக்கள் அவரிடம் புகைப்படங்கள் எடுக்க ஆர்வம் காட்டினர். அந்த வகையில் அங்கு இருந்து தூய்மை பணியாளர்களும் ரோஜாவுடன் செல்ஃபி எடுக்க ஓடி வந்தனர். அவர்களுடன் ரோஜா செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். எனினும், செல்ஃபி புகைப்படம் எடுக்கும் போது நடிகை ரோஜா, தூய்மை பணியாளர்களை நோக்கி அருகில் வர வேண்டாம் அங்கேயே நில்லுங்கள் என செய்கை காட்டுவது போல வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது.

நடிகை ரோஜாவின் இந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. தூய்மை பணியாளர்கள் என்ன தீண்ட தகாதவர்களா? அவர்களால் தான் நமது சுற்றுப்புறமே தூய்மையாக உள்ளது என்கிற வகையில் நியாயம் என்று நேட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில், நடிகை ரோஜா அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்போது திருச்செந்தூர் கோவிலில் தரைதளம் தாழ்வாக இருந்ததால் என்னுடன் செல்பி எடுக்க ஓடி வந்த தூய்மை பணியாளர்களை மெதுவாக வாருங்கள் என்று கூறினேன். மெதுவாக வாங்க என்பதற்கு தான் நான் அப்படி கை காட்டினேன். ஆனால் அவர்களை நான் தொடக்கூடாது, தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்து விட்டனர்.

தூய்மை பணியாளர்கள் செய்யும் பணி என்பது மிகவும் உயர்வானது. அவர்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. இப்படி இருக்கும் போது அவர்களை நான் எப்படி தொட வேண்டாம் என சொல்லுவேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு சிலர் அவதூறு பரப்புகின்றனர். இப்படி அவதூறு பரப்புவது எனக்கு வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+