கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு ஓபிஎஸ் பயப்படுகிறார்.. முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு பயந்தே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு சீட் வழங்கவில்லை என அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எந்த கட்சியாக இருந்தாலும் இரு இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு 3 இலக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது எப்போதும் நடப்பதுதான்.

அதன்படி 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஆயிரக்கணக்கில் திமுகவிலும் சரி, அதிமுகவிலும் சரி விருப்பமனு கொடுத்தனர். எல்லா கட்சிகளிலும் ஏற்கெனவே இவர்கள்தான் வேட்பாளர்கள் என பெரும்பாலான தொகுதிகளுக்கு முடிவு செய்யப்பட்டுவிட்டது.

அதிமுக

அதிமுக

இதில் கேட்டவர்களுக்கு எல்லாம் சீட் கொடுப்பது இயலாத ஒன்று. மேலும் சில கட்சிகளில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே சீட் கொடுப்பதை ஒரு சில நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவர். இதுதான் அதிமுகவில் நடக்கிறது போலும்.

வெற்றி

வெற்றி

இதுபோல் பாதிக்கப்பட்ட மார்கண்டேயன் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் கடம்பூர் ராஜூ எந்த தேர்தல் வெற்றிக்காகவும் பாடுபடவில்லை.

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

அவர் எந்த வெற்றிக்கும் காரணமில்லை. கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு பயந்துதான் விளாத்திகுளத்தில் எனக்கு ஓபிஎஸ் சீட் ஒதுக்கவில்லை. நான் அதிமுக செய்தி தொடர்பாளர் பணியை ராஜினாமா செய்து விட்டேன். கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன்

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பதாகவும் மார்கண்டேயன் தெரிவித்தார். அதிமுகவில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என கூறி ராஜகண்ணப்பன் நேற்றைய தினம் அதிமுகவிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+