ஃபேஸ்புக்கில் பழகிய இளைஞரை.. நேரில் பார்க்க போன பெண்.. அடுத்து நடந்த பயங்கரம்.. தூத்துக்குடியில்..!
இளம்பெண் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
தூத்துக்குடி: ஃபேஸ்புக்கில் பழகிய இளைஞரை சந்திக்க சென்ற பெண், மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கணேசபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா... 29 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலம் விஜய் என்ற நபர் பழக்கமானார்.. இவர் ராமநாதபுரம் கொம்பூதியை சேர்ந்தவர்.. இன்னும் திருமணமாகவில்லை.

ஐஸ்வர்யா
ஆனால், ஐஸ்வர்யா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி விஜய்யிடம் பழகி வந்துள்ளார்... இந்நிலையில், ஒருநாள் விஜய்யை நேரில் பார்க்க ஐஸ்வர்யா சென்றுள்ளார்.. அப்போதுதான், ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகளும் இருப்பது விஜய்க்கு தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.. உடனடியாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவை விஜய் ஒப்படைத்திருக்கிறார்.

போலீஸ்
இதனிடையே, மனைவியை காணவில்லை என்று ஐஸ்வர்யாவின் கணவர் ரங்கன் திருச்செந்தூர் போலீசில் புகார் தந்துள்ளார்.. அப்போதுதான், ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி இருப்பது தெரியவந்துள்ளது.. எனவே, தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு உடனடியாக அவர் கிளம்பினார்.. மற்றொரு பக்கம், ஐஸ்வர்யாவை கணவனுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

மருத்துவமனை
ஆனால், கணவருடன் செல்ல அவர் மறுப்பு தெரிவித்தார்.. எனவே, ஐஸ்வர்யாவை திருச்செந்தூர் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்த போலீசார், ஒரு நாள் இரவு மட்டும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்கள் ஆலோசனை வழங்கும் மையத்தில் தங்க வைத்துள்ளனர்.. இந்நிலையில், இன்றுகாலை ஐஸ்வர்யா அந்த ஆலோசனை மையத்தில் இருந்த பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்... தூத்துக்குடியில் இருந்து கணவர் வந்து அங்கு சேர்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

விசாரணை
கணவனுக்கு விஷயம் தெரிந்துவிடவும், அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஃபேஸ்புக் நண்பனுக்கு திருமணம் ஆனது தெரிந்து விட்டதே என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டாரா? தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள ஆலோசனை மையத்திற்கு அனுப்பப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications