தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து.. ஒரு மாமனார், மருமகன் செய்யும் காரியமா இது!

Google Oneindia Tamil News

Recommended Video

    நகையை மறைத்து வைத்து நாடகமாடிய மாமனார், மருமகன் கைது- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே 111 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மருமகனுடன் சேர்ந்து மாமனாரே நகைகளை மறைத்து வைத்தது அம்பலமாகியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே அழகப்பாபுரம் சித்தன்குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்துரை (70). இவர் ஜோதிடர். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக இரு வீடுகள் உள்ளன. இவர் தனது பூர்வீக வீட்டில் காலை முதல் மாலை வரை ஜோதிடம் பார்த்து பலன் சொல்வது வழக்கம். பின்னர் இரவில் பூர்வீக வீட்டின் எதிரே உள்ள மாடி வீட்டில் தூங்குவது வழக்கம்.

    போலீஸார் விசாரணை

    போலீஸார் விசாரணை

    இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி பால்துரையின் பூர்வீக வீட்டின் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 111 பவுன் நகைகளையும் இரண்டரை லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதையடுத்து தட்டார்மடம் போலீஸில் புகார் செய்தார்.

    நாடகம்

    நாடகம்

    இந்நிலையி்ல பால்துரையின் பூர்வீக வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் 111 பவுன் நகைகள் ஒரு துணிப்பையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பால்துரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் பால்துரை, அவருடைய மருமகனான திருச்செந்தூரைச் சேர்ந்த தங்கதிருப்பதி (40) ஆகிய இருவரும் சேர்ந்து நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலமானது.

    திருட்டு முயற்சி

    திருட்டு முயற்சி

    இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 22-ஆம் தேதி பால்துரையின் பூர்வீக வீட்டின் கூரையை பிரித்து கொண்டு மர்மநபர்கள் உள்ளே இறங்கியுள்ளனர். அங்கு பணம், நகை இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து மறுநாள் காலை இந்த திருட்டு முயற்சி குறித்து பால்துரை, தனது மருமகனிடம் தெரிவித்தார்.

    பிடிபட்ட மாமனார், மருமகன்

    பிடிபட்ட மாமனார், மருமகன்

    அப்போது தங்க திருப்பதி தனது மாமனாரிடம் இந்த கொள்ளை முயற்சியை பயன்படுத்தி மேலும் காசு சம்பாதிக்கலாம் என்ற திட்டத்தை வகுத்து கொடுத்தார். அதாவது 111 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக புகார் கூறினால் போலீஸார் ஆங்காங்கே பறிமுதல் செய்யும் நகைகளில் பாதியையாவது நம்மிடம் கொடுப்பர் என்று திட்டம் போட்டு அதன்படி 111 பவுன் நகை மற்றும் இரண்டரை லட்சம் பணம் காணவில்லை என புகார் கொடுத்தனர். இறுதியில் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

    English summary
    Tuticorin police have arrested 70 year old Astrologer and his son in law for cheating the police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X