சப் இன்ஸ்பெக்டருடன் நெருக்கம்.. அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய பெண் போலீஸ்.. மனைவி பகீர்
தூத்துக்குடி: போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டருடன் நெருங்கி பழகியபோது எடுத்த அந்தரங்க வீடியோக்கள், ஆடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் பறிக்க வேண்டும் என்பதற்காகவே என் கணவருடன் நெருங்கி பழகி அந்தரங்க வீடியோக்களை எடுத்ததாகவும் பெண் போலீஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சப் இன்பெக்டர் மனைவி புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த 35 வயது வாலிபர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் பணிபுரிந்து வரும் போக்குவரத்து போலீஸ் பிரிவில், கயத்தாறில் இருந்து மாற்றுப்பணியாக ஒரு பெண் போலீஸ்காரர் சேர்ந்தார். இந்த பெண் போலீஸ்க்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அந்த பெண் போலீஸும், நிருபர் ஒருவரும் சேர்ந்து எனது கணவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக சப்-இன்ஸ்பெக்டருமான என் கணவருடன் பெண் போலீஸ் நெருங்கி பழகியுள்ளார். அவருடன் ஆபாசமாகவும், அந்தரங்கமாகவும் பேசியுள்ளார். இந்த உரையாடல்களை வாட்ஸ்அப் வீடியோ, ஆடியோ, அழைப்புகள் என செல்போனில் சேமித்து வைத்துள்ளனர். இதை வைத்து பின்னர் பணம் கேட்டு மிரட்ட முடியும் என நினைத்துள்ளனர்.
திடீரென ஒரு நாள் இந்த வீடியோ, ஆடியோக்களை காட்டி என் கணவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் எனது கணவரும், அந்த பெண் போலீஸும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் பின்னர் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, எனது கணவர் சம்பந்தப்பட்ட சில ஆடியோக்களை பெண் போலீஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
தொடர்ந்து 10 நாட்கள் கழித்து எங்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தார். அப்போது எங்களிடம் 40-க்கும் மேற்பட்ட ஆடியோ, 20-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன என்றும், இது எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் இந்த ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டினார்.
இதனால் அந்த பெண் போலீஸ் மற்றும் நிருபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், பெண் போலீஸ் மற்றும் நிருபர் உள்பட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தற்போது கோவில்பட்டி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications