பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்
தூத்துக்குடி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஜனநாயகன் படம் பிரச்சனைக்கு குரல் கொடுக்காதவர் ஜனநாயக ஆட்சியை எப்படி வழங்குவார் என்று தவெக தலைவர் விஜய் குறித்து திமுக அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "நான் 1996 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறேன். வருகிற ஆகஸ்ட் மாதம் வந்தால் 30 வருடங்களாகிறது. திமுக தொடங்கி 75 வருடங்களாகிவிட்டன. சிலர் ஒரு வருடத்திற்கு முன்பு கட்சி தொடங்கிவிட்டு நான் தான் முதலமைச்சர். நான் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். ஆனால் பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயந்து சாகிறார். பாஜக என்கிற வார்த்தையை சொல்ல மாட்டார்கள்.

பாஜக என்றால் பயம்
கரூரில் அவரைப் பார்ப்பதற்கு வந்து இறந்த 41 பேரின் வீட்டிற்கு சென்று கூட ஆறுதல் சொல்லவில்லை. ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார்கள். அன்றைக்கோ அல்லது அடுத்த நாளோ சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்வோம். வண்டியை வைத்து பாதிக்கப்பட்டவர்கள் இவரை சந்திக்க வரவழைக்கிறார். இவர் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். அவரின் மனைவி, மகள், மகன் நிலை எப்படி இருக்கிறது.
தான் பிரச்சனைக்கு கூட அவர் வாய்திறக்கவில்லை. ஜனநாயகன் படம் வெளியீட்டில் உள்ள பிரச்சனைக்கு கூட அவர் குரல் கொடுக்கவில்லை. அவர் எப்படி ஜனநாயக ஆட்சி நடத்த போகிறார். தமிழ்நாட்டிற்கு பாஜக அவ்வளவு நெருக்கடிகளை கொடுக்கிறது. அதற்கு ஏதாவது குரல் கொடுத்தாரா. பாஜக அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. அதைப்பற்றி கேட்டாரா. ஏன் பாஜக என்றால் பயம்.
மக்கள் நலன் சார்ந்த கூட்டணி
இங்குள்ள முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சி எல்லாம் நூற்றாண்டு பார்த்த கட்சிகள். காலம் காலமாக மக்கள் நலனுக்காக திட்டமிட்டு செயல்படும் கட்சிகள். இன்றைக்கு வந்தவர்கள் எல்லாம் நாங்கள் தான் முதலமைச்சர் என்று அவர்களுக்கு அவர்களே கோஷம் போடுகிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணி அப்படி அல்ல. நாங்கள் மக்கள் நலன் சார்ந்தே வாழ்பவர்கள். எங்களிடம் குறைகள் இருந்தாலும் கூட்டணி கட்சிகள் சுட்டி காட்டுவார்கள்.
விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைவருமே மக்கள் நலம் விரும்பிகள். எங்களுக்கு நல்ல ஆலோசகர்கள். கொரோனா, வெள்ளம் என எந்த காலமாக இருந்தாலும் களத்தில் இருப்பார்கள். மக்களுக்காக தன்னலம் பாராமல் சேவை செய்வார்கள். யார் நம்முடன் இருந்து சேவை செய்வார்கள். களத்தில் யார் வந்தாலும் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications