திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். மார்ச் 2 ஆம் தேதியான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7.30 மணிக்கு விநாயகர், சுவாமி, தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் ரத வீதியில் வலம் வந்து அருள் பாலித்து வருகின்றனர். தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் இழுக்கும்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷத்தால் திருச்செந்தூரே அதிர்ந்தது. மாசித் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை மார்ச் 3 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 4 ஆம் தேதி மாசித் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications