கந்துவட்டி கொடுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி.. துடித்து போன தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கந்து வட்டி கொடுமையின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகன், மகள் உள்பட குடும்பத்தினருடன் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கந்து வட்டிக்கு தடை உள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் கந்துவட்டி கும்பலை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

தமிழக அரசும் கந்து வட்டிக்கு எதிரான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது.

கந்துவட்டி கொடுமை

கந்துவட்டி கொடுமை

வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 % மேல் வசூலிப்பதும்.. தனி உபயோகத்திற்கு ஆண்டுக்கு 12% மேல் வட்டி வசூலிப்பது குற்றம் என்று கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அதீத வட்டி வசூல் தடை சட்டம் சொல்கிறது. அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டம் சொல்கிறது. இதேபோல் கந்து வட்டி வசூலிப்பவர்கள் பற்றிய புகார்கள் வந்தால் காவல்துறையும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

குடும்பத்தினருடன் தீக்குளிக்க..

குடும்பத்தினருடன் தீக்குளிக்க..

இருந்தாலும் அவ்வப்போது கந்து வட்டி கொடுமையால் பல குடும்பங்கள் இன்னல்களை சந்திக்கும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் கந்து வட்டி கொடுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

மண்எண்ணெயை ஊற்றி...

மண்எண்ணெயை ஊற்றி...

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சூளவாய்க்கால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் மாரியப்பன். ஜோதிடரான இவர் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் நின்ற மாரியப்பன், யாரும் எதிர்பாராத வகையில், கையில் வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீதும்.. தனது குடும்பத்தினர் மீதும்.. ஊற்றி விட்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

தண்ணீரை ஊற்றிய போலீசார்

தண்ணீரை ஊற்றிய போலீசார்

இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். மாரியப்பன் குடும்பத்தினர் 4 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வட்டிக்கு வட்டி போட்டு துன்புறுத்துகின்றனர்

வட்டிக்கு வட்டி போட்டு துன்புறுத்துகின்றனர்

பின்னர் இது குறித்து மாரியப்பன் கூறுகையில், ''உறவினர் ஒருவரின் தேவைக்காக ரூ. 15 லட்சம் பணம் வாங்கி கொடுத்தேன். தற்போது ரூ. 10 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டோம். வீட்டையும் எழுதி கொடுத்தோம். வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொண்டனர். ஆனாலும் மேற்கொண்டு ரூ. 10 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டுகின்றனர். தொடர்ந்து வட்டிக்கு வட்டி போட்டு துன்புறுத்துகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+