தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை.. அடியோடு சாய்ந்த வாழைகள்.. திருச்செந்தூர் கோயிலுக்குள் மழைநீர்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சிவன் கோயில் வளாகத்தில் மழைநீர் புகுந்துவிட்ட நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுமார் 3 கிராமங்களில் ஒன்றரை லட்சம் வாழைகள் முறிந்து விழுந்திருக்கின்றன.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Heavy Rain in South Districts

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கிட்டத்தட்ட இரவில் மட்டும் 26 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று முதலே நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்ய தொடங்கியது. நேற்றிரவு பெய்த மழையால் ஏராளமான பகுதிகளில் மழைநீர் நிரம்ப தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்து வரும் மழையால் சிவன் கோயில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. அதேபோல் நெல்லையில் மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக 3 கிராமங்களில் நடப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தன.

அதேபோல் மாஞ்சோலை பகுதிகளில் பெய்து வரும் கனம்ழையால் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர், உடன்குடி, குலசை, காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது 10 மணி வரை 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளி வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+