ராத்திரி 2 மணிக்கு முனகல் சத்தம்.. கையும் களவுமா சிக்கிட்டாங்க.. மாரியம்மாள் கணவர் பரபர வாக்குமூலம்!
மனைவி உட்பட 2 பேரை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்
Recommended Video
தூத்துக்குடி: "என் வயசு என்ன, அந்த பையன் வயசு என்ன... இப்படி என் மேல அபாண்டமா சொல்றாரு" என்று ஊரெல்லாம் மாரியம்மாள் என்னை பத்தி சொல்லவும் எல்லாரும் அதை நம்பிட்டாங்க.. அதான் 3 செல்போன் புதுசா வாங்கி, அதுல கேமிரா ஆன் பண்ணி வெச்சு இவங்க கள்ளக்காதலலை கையும் களவுமா பிடிச்சேன்.. ஆதாரத்துடன் அதை ஊர்க்காரங்க காட்டலாம்னு நினைச்சேன்.. அதுக்குள்ள நடுராத்திரி 2 மணிக்கு 2 பேரும் என்கிட்ட சிக்கிட்டாங்க" என்று மனைவி மாரியாம்மாளை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.
பசுவந்தனை அருகிலுள்ள புங்கவர்நத்தத்தைச் சேர்ந்தவர் சண்முகம்.. 58 வயதாகும் இவர் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள்.. ஆனால் இவர் 2-வது மனைவி ஆவார்.. முதல் மனைவி சண்முகத்தை பிரிந்து சென்றுவிட்டார். ஆனால், ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
இந்த குழந்தைகளை வளர்க்கத்தான், மாரியம்மாளை 2-வது கல்யாணம் செய்துள்ளார்.. இவர்களுக்கும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில், கடைசி மகனை தவிர எல்லாருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது.

ராமமூர்த்தி
தன் தொழில் விஷயமாக சண்முகம் வெளியூருக்கு அடிக்கடி செல்வார் என்கிறார்கள்.. அப்படி செல்லும்போதெல்லாம் ராமமூர்த்தி என்பவர் மாரியம்மாளுக்கு அறிமுகமாகி உள்ளார்.. சண்முகம் வீட்டுக்கு எதிரேதான் இவர் வீடு உள்ளது உள்ளது... மாரியாம்மாளும் ராமமூர்த்தியும் நெருங்க பழகுவது சண்முகத்துக்கு தெரிந்துவிட்டது.. அதனால் மனைவி மாரியாம்மாளை சண்முகம் கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

2 மணிக்கு சத்தம்
நடுராத்திரி 2 மணிக்கு ஏதோ பேச்சு சத்தம் கேட்கவும்தான், கண் விழித்துள்ளார் சண்முகம்.. அப்போது வீட்டில் உள்ள ரூமில் மாரியம்மாளும், ராமமூர்த்தியும் ஒன்றாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து, இரண்டு பேரையுமே வெட்டிவிட்டார். போலீசிலும் சரண் அடைந்தார். அப்போது சண்முகம் சொன்னதாவது:

வாக்குமூலம்
"ராமமூர்த்தி வீட்டு கட்டும் வேலை விஷயமாக வரும்போதுதான் மாரியம்மாளுக்கு பழக்கம் வந்தது.. இவர்கள் பழகுவதை நான் பலமுறை கண்டித்தேன்.. ராமமூர்த்திக்கு எங்க ஊர்ல கொஞ்சம் நல்ல பேரு இருக்கு.. யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்யற ஆளு... அதனால நான் இவர்கள் 2 பேரும் உறவை பற்றி தவறான சொல்லியும் யாருமே நம்பல.. காது கொடுத்தும் கேட்கல.

அபாண்டம்
நான் இப்படி புலம்புவதை பார்த்த மாரியம்மாள், "என் வயசு என்ன, அந்தப் பையன் வயசு என்ன... இப்படி என் மேல அபாண்டமா சொல்றாரு" என்று ஊரெல்லாம் சொல்லிட்டு வந்தார்... அதனால என்னைதான் ஊர்க்காரர்கள் சமாதானப்படுத்தினாங்க.. என்ன சொல்லியும் யாருமே நம்பலையேன்னு, என் செல்போன் கேமரா வெச்சு 2 பேரையும் ஆதாரத்துடன் பிடிச்சிடலாம்னு வந்தேன்.. அதுக்காகத்தான் போன வாரம் காஸ்ட்லி செல்போன் வாங்கிட்டு வந்தேன்.. மொத்தம் 3 செல் வாங்கினேன்.

3 செல்போன்கள்
வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ளே.. அப்பறம் ஜன்னல் ஓரத்துல கோணிப்பையில மடிச்சு வெச்சிட்டேன்.. அதில் 2 கேமிராவில் ராமமூர்த்தி வீட்டுக்கு வந்து போவதும், 2 பேரும் ஜாலியா இருப்பதும் பதிவாகி இருந்தது.. அதை ஊர்க்காரர்களிடடம் காட்டலாம்ன்னு முடிவு பண்ணேன்.. அதுக்குள்ளதான் வீட்டுக்குள்ளேயே ராத்திரி 2 மணிக்கு 2 பேரும் வசமா மாட்டிக்கிட்டாங்க.. " என்றார். தொடர்ந்து சண்முகத்திடம் விசாரணை நடந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications