தூத்துக்குடியில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.. அரசிடம் இருந்து பறந்தது உத்தரவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிக்காக 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து எம்.பி, எல்.எல்.ஏக்கள் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால், மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லியிருந்து கடந்த 20ஆம் தேதி சென்னை திரும்பிய தமிழக முதல்வர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேற்று நேரில் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்து, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிக்காக 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தரேஸ் அகமது ஐஏஎஸ் கவனிப்பார். பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரதராஜபுரம், சிவராமமங்கலம், அப்பன்திருப்பதி, குலசேகரநத்தம், சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு பகுதிகளுக்கு, பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா ஐஏஎஸ், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்திற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஐ.ஏஎஸ், வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால். மேலஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி ஆகிய பகுதிகளுக்கு, வருவாய் நிர்வாகம் கூடுதல் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதார துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புணரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications