தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தாங்க குடை.. ஏன் மழையில் நனைகிறீர்கள்.. கனிமொழி காட்டிய கனிவு! சண்முகையா எம்.எல்.ஏ.காட்டிய பணிவு!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., அங்கு மழையில் நனைந்தவாறு நின்ற திமுக எம்.எல்.ஏ. சண்முகையாவிடம் தனது குடையை கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.

கனிமொழி கொடுத்த குடையை ''வேண்டாம்மா நீங்க வச்சுகங்க, நான் வேறொரு குடை வாங்கிக் கொள்கிறேன்'' என பணிவு காட்டிய திமுக எம்.எல்.ஏ சண்முகையா, பின்னால் வந்த கட்சிக்காரர் ஒருவரிடம் குடையை வாங்கிக் கொண்டார்.

உயர் பொறுப்புகளில் இருப்பினும் கூட கனிமொழியின் எளிமையும், கனிவும் அவரது இமேஜை கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் உயர்த்தி வருகிறது.

 ஆங்கிலம் & இந்தியில் மட்டுமே தேர்வு.. துணை ராணுவ படை அறிவிப்பிற்கு.. கொதித்தெழுந்த கனிமொழி ஆங்கிலம் & இந்தியில் மட்டுமே தேர்வு.. துணை ராணுவ படை அறிவிப்பிற்கு.. கொதித்தெழுந்த கனிமொழி

கனிமொழி ஆய்வு

கனிமொழி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பல இடங்களில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மழை நீர் வடிகாலானது எந்தளவு பயன் தருகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக மழை பெய்து கொண்டிருக்கும் போதே அங்கு ஆய்வுக்கு சென்றார் கனிமொழி எம்.பி.. அவருடன் மாநகராட்சி அதிகாரிகள், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது உதவியாளரை குடை பிடிக்க வேண்டாம் எனக் கூறிவிட்டு தனது குடையை தாமே பிடித்துக் கொண்டார் கனிமொழி.

தூத்துக்குடியில் மழை

தூத்துக்குடியில் மழை

தூத்துக்குடி தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் என வரிசையாக ஒவ்வொரு இடமாக கனிமொழி எம்.பி. மழை நீர் வடிகால் கட்டுமானத்தை பார்வையிட்டு வந்தார். அப்போது ரஹ்மத் நகரில் தன்னுடன் வந்த சண்முகைய எம்.எல்.ஏ. குடை இல்லாமல் மழையில் நனைந்தவாறே நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்த கனிமொழி, எது பற்றியும் யோசிக்காமல் இந்தாங்க குடை என தனது குடையை எம்.எல்.ஏ. சண்முகையாவுக்கு கொடுத்தார்.

குடை வேண்டாம்

குடை வேண்டாம்

இதனால் பதறிப்போன சண்முகையா எம்.எல்.ஏ, ''வேண்டாம்மா நீங்க வச்சுகங்க, நான் வேறொரு குடை வாங்கிக் கொள்கிறேன்'' என பணிவு காட்டினார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச்செயலாளர் என உயர்ந்த பொறுப்புகளில் இருப்பினும் கூட கனிமொழி தனது எளிமையை இன்னும் கைவிட வில்லை என்பது தான். இது அவரது இமேஜை கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் உயர்த்தி வருகிறது.

காலில் விழக் கூடாது

காலில் விழக் கூடாது

அதேபோல் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவி ஒருவர் தனது காலில் விழுந்ததை பார்த்து பதறிப்போன கனிமொழி எம்.பி., இனிமேல் இது போல் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் யார் காலிலும் எப்போதும் விழக் கூடாது என அறிவுரை நல்கினார்.

English summary
Kanimozhi MP visited the newly constructed rain water drain in Thoothukudi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X