நிறைய பேர் போனே எடுக்கமாட்டாங்க! இவரு அப்படியில்லை.. அமைச்சர் அனிதாவை புகழ்ந்த கனிமொழி எம்.பி.!
தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போல் ஒரு எளிமையான அமைச்சரை காண முடியாது என கனிமொழி எம்.பி.புகழாரம் சூடியுள்ளார்.
யார் தன்னிடம் உதவி எனக் கேட்டு சென்றாலும் அதை தட்டாமல் செய்து கொடுக்கக் கூடியவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கட்சிக்காரர்கள், பொதுமக்கள், என யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவரிடம் நேரடியாக தொலைபேசியில் பேச முடியும் எனக் கூறியுள்ளார்

கனிமொழி பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி எம்.பி. அதிமுக எந்தக் காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை என்றும் திமுகவை எதிர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது என நம்பிக்கை பொங்க பேசினார். திமுகவை வீழ்த்திவிடலாம் என நினைத்தவர்கள் தான் வீழ்ந்துப் போனார்கள் என்பது வரலாறு எனக் கூறினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
நிறைய பேர் உயர் பொறுப்புகளுக்கு வந்துவிட்டால் போனே எடுக்கமாட்டார்கள் என்ற சூழல் நிலவும் இந்தக் காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் எளிமை போற்றத்தக்கது என பாராட்டினார். தொகுதி மக்கள், கட்சிக்காரர்கள் என யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்து பேசக்கூடிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் திகழ்கிறார் எனக் குறிப்பிட்டார்.

கார் பயணம்
காரில் பயணிக்கும் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை தட்டாமல் எடுத்து பேசி பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காணும் விதத்தை கண்கூடாக தாம் பார்த்திருப்பதாக கனிமொழி எம்.பி. பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் யார் தன்னிடம் உதவி எனக் கேட்டு சென்றாலும் அதை தட்டாமல் செய்து கொடுக்கக் கூடியவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உதவிக் கேட்டால்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கனிமொழியிடம் இருந்து கிடைத்த பாராட்டை வைத்து பார்த்தால் அமைச்சரவை மாற்றத்தின் போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எந்த சேதாரமும் இருக்காது என்பது தெளிவாகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications