தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணக்கோலத்தில் சிலம்பக்கலையை நிகழ்த்திய நிஷா.. நேரில் அழைத்து.. சர்ப்ரைஸ் கொடுத்த கனிமொழி எம்பி!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : தனது திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் சிலம்பக்கலையை நிகழ்த்திய நிஷாவை அழைத்து பேசிய திமுக எம்பி கனிமொழி, அருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Recommended Video

    ஒவ்வொரு பெண்ணும் சிலம்பம் கத்துக்கணும் | Silambam jodi | Oneindia Tamil

    திருமண விழாக்களில் மணப்பெண் மணமகன் இடையே சின்ன சின்ன குறும்பு விளையாட்டுக்கள் அந்த காலங்களில் இடம் பெற்று இருக்கும். அந்த குறும்பு விளையாட்டுகள், குறும்புகள் திருமண வீட்டாரையும், மணப்பெண், மணமகன் இருவரையும் ரசிக்க வைக்கும். காலத்தால் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

    காலம் மாற மாற, குறும்பு விளையாட்டுகளை தாண்டி, முதலே சினிமா பாடல்கள் பாடுவது, உறவினர்கள்,நண்பர்கள் நடனமாடுவது என்று மாறியது.

     பாழடைந்த 50 ஆண்டுகால பள்ளிக் கட்டிடம்... கிடப்பில் போடப்பட்ட மனுக்கள்... தூசி தட்டிய கனிமொழி..! பாழடைந்த 50 ஆண்டுகால பள்ளிக் கட்டிடம்... கிடப்பில் போடப்பட்ட மனுக்கள்... தூசி தட்டிய கனிமொழி..!

    உற்சாகம்

    உற்சாகம்

    திருமணம் என்பது ஒரு நாள் கூத்து என்று இல்லாமல் உற்சாகமாக கொண்டாடும் நிகழ்வாக இப்போது மாறி வருகிறது. முன்பு உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆடிய நிலையில் இப்போது மணப்பெணும் மணமகனும் நடனமாடும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

    சுருள்வாள் வீச்சு

    சுருள்வாள் வீச்சு

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் அருகேயுள்ள தேமாங்குளத்தில் ராஜ்குமார், நிஷா ஆகியோருக்கு கடந்த மாதம திருமணம் நடந்தது. திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா, பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றை ஆடி அசத்தினார்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    அதை பார்த்து, திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இந்த காட்சிகளை பார்த்து திருமண மாப்பிள்ளை அப்படியே மலைத்துப்போனார். உறவினர்களும் நெகிழ்ந்து போனார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைக்கு சிலம்பம், வில் வித்தை, உள்பட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்பது குறித்து மணப்பெண் நிஷாவின் வீடியோ பெரிய விழிப்புணர்வையே ஏற்படுத்தியது. பலரும் நிஷாவை பாராட்டினார்கள்.

    நிஷாவுக்கு பாராட்டு

    நிஷாவுக்கு பாராட்டு

    இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி இதுபற்றிகேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தார் திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் சிலம்பக்கலையை நிகழ்த்திய நிஷாவை அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    English summary
    At a wedding procession near Alwarthirunagar in Thoothukudi district, bride Nisha performed traditional arts such as silambam and sculpting. kanimozhi mp wishes bride at Thoothukudi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X