தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்கும் கனிமொழி! முறைப்படி இன்று விருப்பமனுத் தாக்கல்!
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி எம்.பி.
கனிமொழிக்கு மீண்டும் சீட் உறுதி என்பதால் இப்போதே தூத்துக்குடியில் தேர்தல் களம் களைக்கட்டிவிட்டது. கனிமொழியை எதிர்த்து அதிமுக, பாஜக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறிவருகிறது.

திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு படிவம் விநியோகம் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் மார்ச் 1 முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இன்று வரை திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.
அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்டு கனிமொழி எம்.பி. விருப்பமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கனிமொழி பெயரில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அவரது ஆதரவாளர்கள் அளித்திருந்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரும் கனிமொழி பெயரில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஏற்கனவே விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
நேற்று நவமி, இன்று செவ்வாய்கிழமை என்பதால் பலரும் விருப்பமனு கொடுக்க முன்வரவில்லை. நாளையும், நாளை மறுநாளும் இன்னும் நூற்றக்கணக்கானோர் எம்.பி.சீட் கேட்டு விருப்பமனு அளிக்க முன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமைச்சர் நேரு மகன் பெரம்பலூர், திருச்சி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கும், தருமபுரி தொகுதியில் போட்டியிட பழனியப்பனும் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
நாளை மறுநாளுடன் விருப்பமனு கொடுக்கும் தேதி முடிவடைவதால் நாளையும், நாளை மறுநாளும் அதிக எண்ணிக்கையில் விருப்பமனுக்கள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 10ஆம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் தொடங்கிவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications