கோவில்பட்டி சிறையில் இருவர் மரணம்: வணிகர்கள் கடையடைப்பு - அரசு வேலை தர கோரிக்கை
கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு மாநிலம் முழுவதும் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாளை புதன்கிழமை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாளை புதன்கிழமை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், அங்குள்ள காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடைகள் திறக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 19 தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

இருவர் மரணம்
இதில் இருவருக்குமே நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து இன்று காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு
இந்த படுகொலையை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைத்து நம்முடைய எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் தா.வெள்ளையன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னிக்ஸ் என்பவரும், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ரூ.1 கோடி நிவாரணம்
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு இறந்தவர்களுக்கு தலா ஒரு ரூ.1 கோடி வீதம் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும், இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

காவல்துறை விளக்கம்
இதனிடையே இந்த சம்பவம் பற்றி விளக்கமளித்துள்ள தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், தந்தை ஜெயராஜுக்கு நெஞ்சுவலியும், மகன் பென்னிக்ஸுக்கு காய்ச்சலும் இருந்தது. அவர்கள் உயிரிழக்கவும் அதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications