"ஏங்க.. இதுக்கு பேருதான் திராவிட மாடலா..? தி.மு.கவுக்கு இதான் வேலையே” விளாசிய எல்.முருகன்!
தூத்துக்குடி: தி.மு.க அரசு அமைந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏமாற்றமளிக்கிறது என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தி.மு.க அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி இருக்கிறது. பொய்யான தகவல்களை சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஓராண்டு ஆகியும் நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

இதுதான் திராவிட மாடலா
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மயானங்கள் உள்ளன என்கின்ற நிலையில் இது எப்படி திராவிட மாடல் ஆட்சியாகும்? சமத்துவம் என்று தி.மு.க சொல்கிறது. என்ன சமத்துவம் இங்கே இருக்கிறது? தனித்தனி மயானங்கள் உள்ளதை ஒழிப்பதற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை.
தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் தருபோம் என்றார்கள். ஆனால் அது குறித்து எந்த இடத்திலும் வாய் திறப்பதில்லை. நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. இதெல்லாம் சாத்தியமில்லை என தெரிந்தும் அவற்றை பொய்யாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அதை அப்படியே மறப்பதே தி.மு.க-வின் வாடிக்கை என்றும் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

பொய் குற்றச்சாட்டு
உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு வரிகளில் உயர்த்தப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 100 சதவீதம் வரி அதிகரித்துள்ளது ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமை.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார். நாட்டில் எந்தப் பகுதியிலும் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் என எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

லாக்கப் மரணங்கள்
மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு தான் தி.மு.க அரசு. மக்கள் மீது மட்டுமன்றி ஊழியர்கள் மீதும் கவனம் செலுத்த முடியாத அரசாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே லாக்கப் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திருவண்ணாமலை, சென்னை என பல பகுதிகளில் நிறைய லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல இடங்களில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

இந்துக்கள் கோபம்
மேலும், தமிழக அரசு தொடர்ந்து இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு அனைத்து மதத்திற்கான நடைமுறைகளை பின்பற்றும் அரசாக இருக்க வேண்டும். ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது இந்து மக்களை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது. மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.
மக்கள் உரிய நேரத்தில் இந்து மதத்திற்கு எதிரானவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். தமிழக அரசு உடனடியாக இந்த தருமபுரம் ஆதீன பல்லக்கு தடை உத்தரவை திரும்பப் பெறும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு
ராமேஸ்வரம் பகுதியில் முதன்முறையாக மீனவ பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்தியாவில் முதன்முறையாக கடல்பாசி பூங்கா அமைய உள்ளது. தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை கிடைத்ததும் அந்த பணி தொடங்கப்படும்.
தமிழகத்திலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது தி.மு.க என எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications