உல்லாசத்துக்கு அழைத்து.. கும்பலாக வீடு புகுந்து.. 16 வயது சிறுமியை.. தீக்குளித்ததால் பரபரப்பு
தூத்துக்குடி: உல்லாசத்துக்கு அழைத்ததால் 16 வயது சிறுமி தீக்குளித்துள்ளார்.. இன்னும் விழுப்புரம் ஜெயஸ்ரீயையே மறக்க முடியாத நிலையில், இன்னொரு சிறுமி தீயில் அலறிய சம்பவம் நெஞ்சை உலுக்கி எடுக்கிறது... !!
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அவர்.. 11-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த சரவணன், 24 வயதாகிறது.. இவர் சிறுமியை போனில் கூப்பிட்டு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் தந்து வந்துள்ளார்.. கடந்த கடந்த 8-ம் தேதியும் அப்படித்தான் போன் செய்திருக்கிறார்.. ஆனால் சிறுமி போன் எடுக்கவில்லை.
அதனால் வேறு நம்பரிலிருந்து போன் செய்துள்ளனர்.. புது நம்பர் என்று சிறுமி எடுக்கவும்தான் அது சரவணன் என தெரியவந்து. அப்போது சிறுமியை கடுமையாக சரவணவன் திட்டி உள்ளார்.. திரும்ப திரும்ப போன் வரவும், ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காமல் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார் சிறுமி.. ஆனால் சரவணன் அன்னைக்கு இரவே குகன், வேல்சாமி உட்பட 6 நண்பர்களை அழைத்து கொண்டு சிறுமி வீட்டுக்கே வந்துவிட்டார்... பாலியல் சீண்டலும் நடந்துள்ளது.
எல்லாருமே தண்ணி அடித்து விட்டு வீட்டிற்குள் புகுந்துள்ளனர். தொடர்ந்து தங்கள் ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.. அவ்வாறு இணங்காவிட்டால் குடும்பத்துடன் கொளுத்திவிடுவேன் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தும் போயுள்ளனர்.
இதனால் மனம் நொந்துபோன சிறுமி, மண்ணெண்ணெயை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துவிட்டார்.. உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக் கொள்ளவும் சூடு தாங்காமல் அலறி துடித்தார். கழுத்து, மார்பில் தீக்காயங்கள் ஏற்பட, சிறுமியை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ஆனால் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாராம்.
இது குறித்து குளத்தூர் போலீசில் புகார் அளிக்கப்படவும், விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணகுமார், குகன், வேல்சாமி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.. நடந்த சம்பவம் பற்றி சிறுமி அளித்த ஒரு நிமிட வாட்ஸ்அப் வீடியோ தகவலால்தான் இவ்வளவு தூரம் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. இதை பற்றின தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications