எடப்பாடி ஆட்சிக்கு... மே 19ம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள்... ஸ்டாலின் சொல்கிறார்
Recommended Video
தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு, மே 19ம் தேதி கடைசி மணி அடிக்க தயாராகுங்கள் என, வாக்காளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனால் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேள்விகள் எழுப்பியதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் அவர் அளிக்கவில்லை என்றும் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்ததற்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது ஏன் என்பதற்கும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் மிரட்டியது ஏன் என தான் கேட்ட மூன்று கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி, இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், தூத்துக்குடி - சென்னை இடையே புதிய ரயில் இயக்கப்படும் எனவும், ஒட்டபிடாரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
-
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!











Click it and Unblock the Notifications