மக்கள் மனநிலை என்ன? ஸ்டாலினிடம் ஒளிவுமறைவின்றி உண்மையை உடைத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு!
தூத்துக்குடி: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் மக்கள் வீடுகளையும், பொருட்களையும் இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளநீர் வீட்டுக்குள் வருமளவுக்கு மழை பெய்யும் என்பதை எதிர்பார்க்காத நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களிடம் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அமைச்சர் எ.வ.வேலுவை ஒரு இடத்தில் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அவரிடம் தங்கள் மொத்தக் கோபத்தையும் கொட்டத் தொடங்கினர். இதனால் அந்த இடமே பரபரப்பானது. காவல்துறையினர் மிகுந்த சிரமத்துடன் அமைச்சர் எ.வ.வேலுவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதேபோல் தான் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மீது பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளப் பாதிப்பு மற்றொரு பக்கம் தனது அமைச்சரவையில் உள்ள பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு என முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களாகவே அப்செட் மனநிலையில் காணப்படுகிறார்.
இருப்பினும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு போன்றவர்களிடம் அலைபேசி மூலம் அடிக்கடி பேசிய ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கள நிலவரங்கள் பற்றி கேட்டறிந்துக்கொண்டே இருந்தார். சென்னையை காட்டிலும் பாதிப்பு அதிகம் என்பதால் மீட்புப் பணியும், நிவாரணப் பணியும் சவாலாக உள்ளதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, மக்களின் கோப மன நிலை குறித்தும் ஒளிவு மறைவின்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்.

முடிந்தவரை மக்களின் கோபத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை களத்தில் நின்று தாங்கள் எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பி விடும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நேற்று மத்தியக் குழு வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுகிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்தது தான்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications