தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய திருவிழா! அமைச்சர் கீதா ஜீவனின் சென்டிமெண்ட்! பின்னணி என்ன?
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தார்.
ஆண்டுதோறும் பனிமய மாதா தேவாலய திருவிழாவிலும், கொடியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்பதை சென்டிமெண்டாகவே கருதி வருகிறார் அமைச்சர் கீதா ஜீவன்.
இன்று நேற்று என்றில்லாமல் பல ஆண்டுகளாக பனிமய மாத ஆலய திருவிழாவில் பங்கேற்பதை அமைச்சர் கீதா ஜீவன் வழக்கமாக கொண்டுள்ளார்.

தூத்துக்குடி நகர்
தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலயமானது உலகப்புகழ் பெற்ற ஒரு வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

அமைச்சர் கீதா ஜீவன்
இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை பொறுத்தவரை தனக்கு எத்தனை பணிகள் இருந்தாலும் அவைகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய கொடியேற்ற நிகழ்விலும், அதன் பின்னர் நடைபெறும் திருவிழாவின் சிறப்பு திருப்பலிகளிலும் கலந்துகொள்வார். தனது சிறுவயது முதலே அவர் இதை ஒரு சென்டிமெண்டாக கருதி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெகன் பெரியசாமி
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக உள்ள அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமியும் ஆண்டு தவறாமல் பனிமய மாதா திருவிழாவில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை தூத்துக்குடி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை, அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி பனிமயமாதா தேவாலயத்துக்கு அழைத்துச் சென்று அதன் பெருமைகளை எடுத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மாடத்தில் நின்று
இதனிடையே இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு பனிமய மாதா தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்ச்சியில் கூட்டம் குவிந்து வழிந்தது. இதனால் மாடத்தில் நின்றவாறு கொடியேற்றக் காட்சிகளை பார்த்த அமைச்சர் ஜீதாஜீவன், திருவிழா நடைபெறும் அடுத்த 10 நாட்களும் உரிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ளுமாறு தனது சகோதரர் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications