திருச்செந்தூரில் ஒரே ஆச்சரியம்.. கோயிலுக்குள் நடந்த "அந்த" அதிசயம்.. நெகிழ்ந்த மக்கள்.. எப்படிங்க?
தூத்துக்குடி: திருச்செந்தூர் பகுதி மக்களே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.. இது ஒன்றும் முதல் கிடையாது.. அடுத்தடுத்து இப்படி சம்பவங்கள் தொடர்ந்து அங்கு நடந்து வருகிறதாம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடும், கடற்கரை ஓரத்தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவது வழக்கம்.

விடுமுறை: அதுவும், விடுமுறை காலங்களிலும் சரி, விசேஷ நாட்களிலும் சரி, ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.. கடலில் புனித நீராடிவிட்டு, அதற்கு பிறகு, முருகப் பெருமானை வழிபட்டு செல்வது பக்தர்களின் வழக்கம்... அப்படித்தான், இந்த கோடையில் விடுமுறை நாட்கள் என்பதாலும், நேர்த்திக்கடனை செலுத்திடவும், நாட்களிலும் பொதுமக்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகிறார்கள்..
அந்தவகையில், தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்த இந்திரா என்பவர், தன்னுடைய குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் புனித நீராடினார்... அப்போது, இந்திரா கையில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க வளையல், கடல்நீரில் மாயமாகிவிட்டது.. இதனால் இந்திரா தங்க நகையை காணாமல் பதறிப்போனார்..
ஒப்படைப்பு: இதனிடையே, கடலில் சிப்பி அரித்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம், தங்க வளையல் கிடைத்திருக்கிறது.. அது குறித்து விசாரித்தபோதுதான், அது இந்திரா தவறவிட்ட வளையல் என்பது தெரியவந்தது.. அதற்கு பிறகு, வளையலை இந்திராவிடம் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கொண்டுவந்து பத்திரமாக ஒப்படைத்தனர்.
இப்படித்தான் சில மாதங்களுக்குமுன்பு, திருப்பூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார்.. அப்போது கடலில் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.. கோயிலில் உள்ள காசி விஸ்வநாதன் என்கிற அர்ச்சகரிடம் தன்னுடைய தங்கச் சங்கிலி கடலில் காணாமல் போனது பற்றி அதிர்ச்சியுடன் கூறினார்.

அதற்கு அந்த அர்ச்சகர், "உங்க தங்க செயின் எங்கேயும் போகாது. முருகன் மேல பாரத்தை போட்டுட்டு மனமுருக வேண்டுங்க கிடைச்சிடும்" என்றார்.. அதற்கு பிறகு, கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் 40 பேர், தொடர்ந்து 8 மணி நேரம் கடலில் மூழ்கிக் காணாமல் போன 10 பவுன் தங்கச்சங்கிலியை தேடினர்... இறுதியில், பார்த்திபன் என்ற சிப்பி அரிக்கும் தொழிலாளியின் அந்த தங்கச்சங்கிலி கிடைத்தது..
ரஜினிகாந்த்: அது ரஜினிகாந்த் தவறவிட்டது என்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் ஒப்படைத்தார். இதனால் ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த், தங்கச்சங்கிலியை தேடிக்கொடுத்த கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களை, ஆரத்தழுவி கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தார்.
"கடல்ல செயின் காணாமல் போனதும் ரொம்ப மனம் நொந்துட்டேன். அர்ச்சகர் சொன்னது மாதிரியே எம் பெருமான் முருகனை மனமுருக வேண்டி, நெத்தியில விபூதியை பூசுனேன். 8 மணி நேரத்துல என் செயின் கிடைச்சிடுச்சு. ஓம் முருகா என்று சொன்னபடியே, கோயில் கோபுரம் நோக்கிக் கும்பிட்டார் ரஜினிகாந்த்... இப்போது தங்கவளையல் கிடைத்த மகிழ்ச்சியில் இந்திராவும் அப்படித்தான் பூரித்து போய் உள்ளார்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications