கரூரில் ஜோதிமணிக்குத்தானே வாக்களித்தீர்கள்.. தப்பிதவறி வேறு யாருக்கும் வாக்களிக்கலையே? ஸ்டாலின் கலகல
Recommended Video
அரவக்குறிச்சி: கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்குத்தானே வாக்களித்தீர்கள். தப்பித்தவறி வேறு யாருக்கும் வாக்களிக்கவில்லையே என ஸ்டாலின் கேள்வி எழுப்பியவுடன் சிரிப்பலை எழுந்தது.
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த தொகுதிக்கு உட்பட்ட தளவாய் பாளையம், புகழும் சர்க்கரை ஆலை பகுதி, வேலாயுதம்பாளையம், ஆலமரத்து மேடு, புன்னம் சத்திரம், புஞ்சை காலக் குறிச்சி, குப்பம், ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.

போராடுபவர்
அப்போது ஸ்டாலின் பேசுகையில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு வருகிற 19ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சிறப்பானதொரு வெற்றியைத் தேடித் தர வேண்டும். உங்களுக்காக போராடும் மாபெரும் இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆதரவு
அந்த உணர்வோடு உரிமையோடு உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு நீங்க எல்லாம் சிறப்பானதொரு ஆதரவை அளித்து உள்ளீர்கள்.

பொதுமக்களிடம் பதில் கேட்ட ஸ்டாலின்
இதில் எந்த மாற்றமும் கிடையாது. அது உண்மைதானே அதில் சந்தேகம் ஏதும் இல்லையே. தப்பித்தவறி வேறு யாருக்கும் ஓட்டு போடவில்லையே, கை சின்னத்துக்கு தானே போட்டிங்க என பொதுமக்களிடம் கேள்வி கேட்டு பதிலை பெற்றார்.

செந்தில் பாலாஜிக்கு ஆதரவு
பின்னர் தொடர்ந்த ஸ்டாலின் மத்தியில் இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு வாக்களித்தீர்கள். அதுபோல தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் ஆட்சிக்கு முடிவு காண வேண்டும் என்று சொன்னால் வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு நீங்கள் வாக்களித்து ஆதரவு தர வேண்டும்.

ஆளுநரை சந்தித்த செந்தில் பாலாஜி
ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதி பிரதிநிதி இல்லாத ஒரு பகுதியாக இருந்து வந்தது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஊழல் நிறைந்த முதல் அமைச்சராக இருக்கிறார். லஞ்சம் வாங்குகின்ற மக்களைப் பற்றி கவலைப்படாத முதல் அமைச்சராக இருக்கிறார். எனவே அவரை மாற்ற வேண்டும் என 18 எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார்கள். அதில் செந்தில்பாலாஜி ஒருவர்.

நலத்திட்டங்கள்
இதுவரை பிரதமராக மோடி இருந்ததால் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருந்தார். 23ஆம் தேதிக்கு பிறகு மத்தியில் ராகுல் பிரதமராக உட்கார போகிறார். மீண்டும் செந்தில் பாலாஜி தொகுதியின் உறுப்பினராக சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை செய்து தர காத்திருக்கிறார்.

தண்ணீர்
புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம், தளவாய் பாளையம், ஒரத்தை, கோவிந்த பாளையம் விவசாய பணிகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு விவசாய பணிகளுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

தமிழகம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். கிராமப்புற மகளிருக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன், 50 லட்சம் மகளிருக்கு மக்கள் நல பணியாளர்கள் பணி வழங்கப்படும். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்.

கொடுமை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருக்கிறது. கொடநாடு பிரச்சினைகளைப் பற்றிப் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு பெற்று இருக்கிறார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை கடத்தி சென்று பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை செய்திருக்கிறார்கள்.

மிரட்டி
பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் எங்கு இருக்கிறீர்கள். நானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன்தான். இப்படி ஒரு கொடுமை அங்கு நடைபெற்று இருக்கிறது. அதுமட்டுமல்ல பெரம்பலூரில் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர் வேலை வாய்ப்பு தருவதாக இளம் பெண்ககளை வரவழைத்து தகாத முறையில் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி இருக்கிறார்கள்.

அமோக ஆதரவு
ஆக யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகியிருக்கிறது. உலகமெங்கும் இருக்கக்கூடிய தமிழர்களின் தலைவர், இந்தியாவுக்கு பிரதமர்களையும், ஜனாதிபதிகளையும் உருவாக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. வருகிற தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு அமோக ஆதரவை தரவேண்டும் என வாக்காளர்களை பார்த்து கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications