விடாமல் உயரும் தூத்துக்குடி.. துறைமுகத்தில் நிற்கும் ராட்சசன்.. இந்த திட்டம் வந்தா தமிழ்நாடே மாறும்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலைகள் அமைக்கப்படும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளன.
மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
அணு மின் நிலையம், அனல் மின்நிலையம் மட்டும் இன்றி புகையை வெளியேற்றாத, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதை மனதில் வைத்தே தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
தூத்துக்குடியில் உற்பத்தி: இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கூட இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு டென்மார்க்கை அணுக முக்கிய காரணம் இருக்கிறது. உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக உள்ளது.
தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டென்மார்க்கை அணுக இதுவே காரணம் ஆகும். காற்றாலை மின் உற்பத்தி மைய மார்க்கெட்டில், அதிலும் கடலில் மையங்களை அமைப்பதில் உலகிலேயே டென்மார்க்தான் தற்போது டாப். இதன் காரணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது டென்மார்க் மட்டுமின்றி யு.கேவுடனும் தமிழ்நாடு கடல் காற்றாலை மின்சாரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய உள்ளது. 5 நாள் அரசு முறை பயணமாக அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்றார்.
அதுவும் கூட இதை மையப்படுத்தியே இருந்தது. இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications