பொங்கல் பரிசு தொகுப்பு.. பொங்கலை கொண்டாடுபவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்! அரசுக்கு பறந்த கோரிக்கை
தூத்துக்குடி: பொங்கல் என்பது இந்துக்கள் பண்டிகை. ஆனால் திமுக அரசு பொங்கல் பண்டிகையை மதமாற்றம் செய்துள்ளது. பொங்கல் பரிசு பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் மூன்று நாள் சுதேசி சந்தை கண்காட்சி காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அர்ஜுன் சம்பத்," ஜனவரி 1 புத்தாண்டு கொண்டாட்டம் என்கின்ற பெயரில் கலாச்சாரம்-பண்பாட்டு சீரழிவை,போதை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது. நள்ளிரவில் இந்து திருக்கோயில்களில் நடை திறந்து ஆகம விதிகளுக்கு முரணான ஆங்கில புத்தாண்டு பூஜைகளை அனுமதிக்க கூடாது.

அர்ஜுன் சம்பத்
தமிழக அரசின் "வெல்லும் தமிழ் பெண்கள்" மாநாட்டுக்காக அரசு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பேருந்துகள் மாநாட்டு பணிகளுக்கு மாற்றப்பட்டதால் உடுமலை, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் பெரும் சிரமம் அடைந்தனர். தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் சமமாக வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் பெண்கள் துயரத்தில் உள்ளனர். ஆசிரியர்கள், செவிலியர்கள் தெருவில் போராட்டத்தில் இருக்கிறார்கள் அந்த பெண்களை திமுக அரசு சிறை வைத்துள்ளது. பின்னர் எப்படி வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு நடத்த முடியும்.
இந்து மக்கள் கட்சி
மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக கூறுவது உண்மையல்ல. கடந்த ஆண்டுகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. இளைஞர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை. வரும் ஜனவரி 12ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் தேசிய இளைஞர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கான முகாம்கள் நடத்தப்படும்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் என்பது இந்துக்கள் பண்டிகை. ஆனால் திமுக அரசு பொங்கல் பண்டிகையை மதமாற்றம் செய்துள்ளது. பொங்கல் பரிசு பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். திடீர் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி விட்டு அறநிலையத் துறை புதிதாக கோவில்களை கட்ட வேண்டும். ஆண்டவன் முன்னிலையில் பணக்காரன், ஏழை என்ற வேறுபாடு இல்லை என்பதால், அனைவருக்கும் சம உரிமையுடன் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை உள்ளது.
திமுக அரசு
தமிழகத்தில் இன்று அரசியல் களத்தில் கிறிஸ்துவ ஓட்டை யார் வாங்குவது மு.க.ஸ்டாலினுக்கும், ஜோசப் விஜய்க்கும் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி போட்டுக் கொண்டு கிறிஸ்துவ மக்களை ஏமாற்றுகின்றனர். நான் ஜோசப் விஜயை பாரட்டுகிறேன்.. ஜோசப் கிறிஸ்துவர் என்று பெருமை கொள்கிறார். அதே போல் நாங்களும் இந்து என்று பெருமை கொள்கிறோம். ஸ்டாலின் , உதயநிதி, ஜோசப் விஜய் மூவரும் சேர்ந்து கிறிஸ்துவ சபையை வலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கிறிஸ்துவ சர்ச்சுகள் அரசியலில் ஈடுபடுகிறது.
மத அரசியல்
இதனால் திமுக கிரிப்டோ கிறிஸ்துவ கட்சியாக செயல்படுகிறது. இதனால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி சரிந்து உள்ளது.இந்த கருத்தை முன் வைக்கிறோம். நேரடியாக நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். ஆனால் திமுக கிறிஸ்துவ அமைப்புடன் கலந்துக் கொண்டு நிராகரித்து வருகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய் ஏன் எஸ். ஐ. ஆரை எதிர்க்க வேண்டும். திமுக உருவாக்கிய கட்சி தவெக. எப்படி கடந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்தை உருவாக்கினார்களோ அதே போல் தவெகவையும் உருவாக்கி உள்ளனர். திமுக என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதை விஜய் படித்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications