தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேட்டி கசங்காம வீட்டுக்கு அனுப்புவதா.. அது ராஜதந்திரி கருணாநிதியாலேயே முடியலை.. ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: வேட்டி கசங்காமல் எங்களை வீட்டுக்கு கமல்ஹாசன் அனுப்பி விடுவாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குரியது என கூறி பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். எனினும் கமல் பேசியது சரியே என மற்றொரு தரப்பினரும் உள்ளனர்.

இந்த நிலையில் இரு நாட்கள் பிரசாரம் செய்யாமல் இருந்த கமல்ஹாசன் நேற்றைய தினம் தோப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் அரவக்குறிச்சி விவகாரத்துக்கு விளக்கம் அளித்து பேசினார்.

என்னாது சரித்திர உண்மையா.. இல்லை கமல் அது தரித்திர உண்மை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னாது சரித்திர உண்மையா.. இல்லை கமல் அது தரித்திர உண்மை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆறாது

ஆறாது

இதைத் தொடர்ந்து தான் கூறிய கருத்தை அரசியல் லாபத்துக்காக திரித்து சொல்கிறார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் சரித்திர உண்மையை சொல்லும் போது ஏற்படும் காயம் ஆறாது. அதை ஆற்றத்தான் வந்திருக்கிறேன்.

அர்த்தம்

அர்த்தம்

உண்மை கொஞ்சம் கசக்கும். அந்த நோய்க்கு மருந்து ஆகும். இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம் என்றார் கமல்ஹாசன். அய்யோ வீழ்த்துவோம் என சொன்னவுடன், ஏதோ ரத்தம் வரும்படி வீழ்த்துவோம் என்ற அர்த்தத்தில் நான் கூறிவிட்டேன் என கோபப்படாதீர்கள்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ஜனநாயக முறையில் வீழ்த்துவோம் என்றுதான் நான் கூறினேன். எனவே எந்த கறையும் படாத வகையில் வெள்ளையும் சொள்ளையுமாக வீட்டுக்கு போகலாம். கவலை வேண்டாம் என்றார் கமல்ஹாசன். இந்த நிலையில் இதுகுறித்து தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அழிக்க முடியாது

அழிக்க முடியாது

அப்போது அவர் கூறுகையில் வேட்டி கசங்காமல் வீட்டிற்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகிறார். ராஜ தந்திரி என பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அதிமுக அரசை அழிக்கவோ வீட்டுக்கு அனுப்பவோ முடியவில்லை.

தேர்தல்

தேர்தல்

கமல் கத்துக்குட்டி. ஒரு கருத்தை கூறிவிட்டால் பெரிய ஆளாகிவிட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம். இவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள் என ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசினார்.

English summary
Minister Rajendra Balaji says that As per Kamal's statement he could not send us home, because this was not done even by Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X