சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் மர்மம் - முதல்வர் கருத்து தெரிவிக்காதது ஏன் என்கிறார் கனிமொழி
சாத்தான்குளத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு நிதி உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்று தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரை கடந்த 19 தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர், அப்போது காவல்துறையினருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பாதிப்பு ஏற்பட்டது. கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் தந்தை ஜெபராஜூம் மரணமடைந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு ட்விட்டரில் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
தாக்கிய போலீஸ்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது.
|
உரிய நடவடிக்கை தேவை
காவல்துறை நிகழ்த்தியிருக்கும் வன்முறை என்பது தெளிவாகத் தெரிகிறது. உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
|
பணியிட மாற்றம் போதுமா
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவத்தில் எஸ்.ஐ. இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது தண்டனை அல்ல.
|
கடுமையான நடவடிக்கை
இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
|
உரிய இழப்பீடு
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடரும் போராட்டம்
தந்தை மகன் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸ் தாக்கியதால் உயிரிழந்த ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications