சாத்தான்குளம் அருகே.. மாதா கோயில் வளாகத்தில் வேப்ப மரத்தில் நடந்த அதிசயம்! மெய்சிலிர்த்த பக்தர்கள்
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே, மாதா கோயில் ஒன்றின் வளாகத்தில் அமைந்திருக்கும் வேப்ப மரத்தில் பால் போன்ற திரவம் வெளியானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியருக்கிறது. இதை பார்த்த பக்தர்கள் மெய்சிலிர்த்து போயிருக்கின்றனர்.
வேப்ப மரத்தில் பால் கசியும் சம்பவம், தெய்வீகமானது என்று கூறி, உள்ளூர் மக்கள் மரத்தை புனிதமாக வணங்கி செல்கின்றனர். இது நன்மையின் அறிகுறி என்றும் பேசிக்கொள்கின்றனர்.

ஆனால் வேப்ப மரம் மட்டுமல்லாது மா, பலா, சப்போட்டா, செர்ரி, பைன் உள்ளிட்ட மரங்களிலும் பால் போன்ற திரவம் வடியும். இந்த திரவம் இயல்பான ஒன்றுதான், தெய்வீக சக்தியால் வெளிப்படுவது கிடையாது. இதில் எந்த மேஜிக்கும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்படி வெள்ளை நிறத்தில் திரவம் கசிவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மரம் உள்ள பகுதியில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும்போது, வேர் மண்டலத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே இந்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த, தண்டு பகுதியானது இப்படி திரவத்தை வெளியேற்றும்.
இது தவிர, மரத்தை வெட்டும்போதும், அதன் தண்டு பகுதியில் பலமான சேதம் ஏற்பட்டிருந்தாலோ அதை சரி செய்ய இப்படி திரவம் சுரக்கும். சில சமயங்களில் பூச்சி தாக்குதலை சமாளிக்கும் விதமாகவும் இப்படியான திரவத்தை மரம் சுரக்கும். பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றை சமாளிக்கவும் இந்த திரவம் சுரக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications