சிறுமியை கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர்.. 6 மாத சிசுவை வீட்டில் புதைத்த பயங்கரம்.. அலறும் தூத்துக்குடி

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சாமி கும்பிடலாம் என்று நம்பி கோயிலுக்கு வந்த மைனர் பெண்ணுக்கு.. கூல்டிரிங்ஸ்-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சீரழித்துள்ளார் கோயில் பூசாரி.. இவர் ஒரு திமுக பிரமுகர் என்பது அடுத்த ஷாக்! பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானதுடன், மாத சிசுவை இறந்த நிலையில் பெற்றெடுத்து, வீட்டில் புதைத்த கொடுமை நிகழ்ந்துள்ளது!

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே வசித்து வந்த சிறுமிக்கு 16 வயதாகிறது.. அங்குள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுக்கு சில மாதமாக வயிறு வீங்கி கொண்டே வந்துள்ளது.. ஆனால் அது கர்ப்பம் என்று பிறகுதான் தெரிந்துள்ளது.

இந்நிலையில், 6 மாத சிசு ஒன்றும் சிறுமிக்கு பிறந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், விவகாரம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, சிசுவின் சடலத்தை வீட்டில் ஒரு பகுதியில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும் தெரிகிறது.

புதுக்கோட்டை போலீஸ்

புதுக்கோட்டை போலீஸ்

இதனை அக்கம்பக்கத்தில் இருந்த ஒருவர் பார்த்துவிடவும், அந்த ஊர் முழுக்க விஷயம் பரவி விட்டது. இது சம்பந்தமாக புதுக்கோட்டை போலீசிலும் தகவல் தந்துள்ளனர்.. இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.

மெக்கானிக்

மெக்கானிக்

இந்த பகுதியில் ராஜ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இவர் ஒரு மெக்கானிக்.. 50 வயதாகிறது.. தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணியின் துணை அமைப்பாளராகவும் உள்ளார். அங்கிருக்கும் கோயில்களில் நடக்கும் பூஜைகளுக்கும் சென்று வருவார். இவரது வீட்டுக்கு டிவி பார்க்க அடிக்கடி சிறுமி சென்று வருவாள்.

பலாத்காரம்

பலாத்காரம்

கோயிலுக்கு பக்கத்தில்தான் ராஜ் வீடு உள்ளதாம்.. வீட்டுக்கு வரும் சிறுமியிடம் காமெடியாக சிரித்து பேசுவாராம்.. இந்த ராஜுக்கும், சிறுமியின் அப்பாவுக்கும் ஒரே வயசுதான் ஆகிறது.. ஒருமுறை சிறுமி வீட்டுக்கு வந்த சமயம், கூல்டிரிங்சில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்து.. சீரழித்துள்ளார். விஷயத்தை வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும், படிப்பு கெட்டுவிடும் என்று அந்த பூசாரி மிரட்டி அனுப்பி உள்ளார்.. பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமானார்.

இறந்து பிறந்த பிசு

இறந்து பிறந்த பிசு

ஆனால் இந்த விஷயத்தை தெரியாத சிறுமி, அடிக்கடி வயிறு வலிப்பதாக சொல்லி உள்ளார்.. வயிற்று வலிக்கு மாத்திரைகளை வாங்கி வாங்கி விழுங்கி உள்ளார்.. இதில் வயிற்றில் இருந்த சிசு இறந்தே போய்விட்டதாக தெரிகிறது.. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரத்த போக்கு அதிகமாகி, வீட்டிலேயே குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதற்கு பிறகுதான் வீட்டுக்கே விஷயம் தெரிந்துள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் போக்சோவில் ராஜுவை கைது செய்தனர்.

கைது

கைது

இவருக்கு 22 வயதில் ஒரு மகனும், 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வெச்சிருக்கார் ராஜ்.. இதில் ஹைலைட் என்னவென்றால், சிறுமியின் நிலவரம் என்ன என்பதை அடிக்கடி தெரிந்து கொள்ளவும், தன்னை நல்லவன் போல காட்டிக் கொள்ளவும், அந்த வீட்டுக்கு சென்று எல்லாரிடமும் பேசிவிட்டு வருவாராம். வீட்டுக்கு பின்பக்கம் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+