தூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை
பள்ளி ஆசிரியர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்
தூத்துக்குடி: பட்டப்பகலிலேயே பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடியையே அதிர வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகன். 40 வயதாகிறது. இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் சிறப்பு பள்ளியில் 12-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் கிரேஸி என்ற மனைவியும், ரோஸி ஏஞ்சல் என்ற 4 வயது மகளும் உள்ளனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருஷமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

முருகன்
எனவே அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கம்புரத்தை சேர்ந்த பிரியா என்ற என்ற பெண்ணை 2-வதாக வடிவேல் கல்யாணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடிவேல்முருகன் இன்று வழக்கம் போல் வேலையில் இருந்தார். மாலையில் அவரை தேடி கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்ற ஆஸ்டின் அங்கு வந்தார்.

அற்புத செல்வம்
ஆஸ்டினுக்கு வயது 27 ஆகிறது. இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அற்புத செல்வம், வடிவேல் முருகனை கத்தியால் குத்தினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனரே தவிர யாரும் வடிவேலுவை காப்பாற்ற முன் வரவில்லை.

விசாரணை
அளவுக்கு அதிகமாக கத்தி குத்துப்பட்ட வடிவேல்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு
இதுதொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர். பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications