திருச்செந்தூர் கடலில் மிதந்த முள்ளெலிகள்.. வலியால் துடித்தலறிய பக்தர்கள்! அதிகாரிகள் சொன்ன விளக்கம்!
தூத்துக்குடி: உலகப்புகழ் பெற்ற திருசெந்தூர் முருகனை வார இறுதியை முன்னிட்டு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடற்கரையில் நீராடி முருகனை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் முள்ளெலிகள் புனித நீராடுபவர்கள் மீது குத்துவதால் பக்தர்கள் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென முள்ளெளிகள் கரை ஒதுங்க காரணம் என்ன என்று மீன்வளத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதைத் தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரைக்கு பக்தர்கள் இறங்கும் படிக்கட்டுகள் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு அடைக்கப்பட்டது. தொடர்ந்து கடலறிப்பு தற்காலிகமாக சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பக்தர்கள் கடலில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பக்தர்களுக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. கடற்கரை கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு அவ்வப்போது உள்வாங்கியும் கடல் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இதனால் கடலில் நீராடும் பக்தர்கள் கவனத்துடன் நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி உள்ளது. ஆங்கிலத்தில் மூரை என்று அழைக்கப்படும் இந்த கடல் முள்ளெலி சிறிய, கூர்மையான முட்கள் கொண்டது. கோள வடிவமுள்ள இது ஒரு கடல் வாழ் விலங்கினமாகும். இதை கடல் ஊமத்தை என்றும் அழைப்பார்கள். இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு மூராங்குச்சி என்ற பெயர் உண்டு.
இந்த மூராங்குச்சிகளை 1990 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பள்ளியில் படிக்க கொண்டு செல்லும் சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்தினார்கள். இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று திடீரென இந்த மூரை என அழைக்கப்படும் கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி காணப்படுகிறது. இதனால் திருச்செந்தூர் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மேல் உடலில் உள்ள ஊசி போல கூர்மையான குச்சியால் குத்துவதால் பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டதால் சிலர் வலியால் அலறினார்.
மேலும் சிலருக்கு கடுமையான வலி, அரிப்பு, தோல் தடிப்பு உள்ளிட்டவையும் ஏற்பட்டது. இதற்கிடையில் கடற் கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பக்தர்கள் குளித்த இடத்தில் கிடந்த இந்த கடல் முள் எலிகளை கரைக்கு எடுத்து வந்து கரையில் விட்டனர். அப்போது அந்த கடல் முள்ளெலிகள் உடலில் உள்ள கூர்மையான குச்சியால் கரையில் நெளிந்து கொண்டிருந்தது.

அதன்பின் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அதை கையில் எடுத்து அங்கிருந்த பக்தர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை பார்த்த பக்தர்கள் ஆர்வமுடன் தங்களது கைகளில் வாங்கி பார்த்து ரசித்தது மட்டுமல்லாமல் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பக்தர்கள் நீராடும் இடங்களில் இதுபோல் காணப்படும் கடல் முள்ளெலிகளை எடுத்து பக்தர்கள் நீராடும் இடத்தை தாண்டி கடலுக்குள் கொண்டு விட்டனர். அதே நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் முள் எலிகள் கரை ஒதுங்க என்ன காரணம் என தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.
இந்த நிலையில் ஆழ்கடலில் மட்டுமே வசிக்கும் முள்ளெலிகள் திடீரென கரை ஒதுங்குவதற்கு காரணம் என்ன என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். அதில்," ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே மூரை எனப்படும் முள்ளெலிகள் வசிக்கின்றன. இவை கரை ஒதுங்குவது மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வு. சில நேரங்களில் மீனவர்களின் வலைகளில் முள்ளெலிகள் சிக்கினால் அவற்றை கடலிலேயே விட்டுவிடுவார்கள். அது போன்று மீனவர்கள் வலையில் இருந்து வீசி எறிந்த முள்ளெலிகள் ஒரு சில மட்டுமே தற்போது கரை ஒதுங்கி இருக்கின்றன. சில இடங்களில் ஒட்டுமொத்தமாக கூட்டம் கூட்டமாக மீன்களும், பிற கடல் உயிரினங்களும் கரை ஒதுங்கும். ஆனால் தற்போது மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கரை ஒதுங்கி உள்ளன. இதனைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் வேறு எதுவும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்" எனக் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications