கள்ளு விஷமென்றால்.. டாஸ்மாக் சாராயம் என்ன மிளகு ரசமா.. ஆவேசமான சீமான்!
திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதற்காக சீமான் பனை ஏறும் பயிற்சி எடுத்து வருவதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது.
சீமான் பேட்டி
சீமானின் இந்த போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், கள்ளு இறக்கும் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் ஒரு 5 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பார்கள். ஆனால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், மொத்தமாக எல்லோரும் பனை மரம் ஏறுவோம்.

கள் விஷமல்ல
தடை என்றால் அது உடைப்போம். அது எங்கள் பரம்பரையின் பழக்கம். ஒரேயொரு கேள்வி தான், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கள்ளு இறக்க அனுமதி இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிப்பது ஏன்? கள்ளு விஷம் என்றால், டாஸ்மாக் சாராயம் என்ன மிளகு ரசமா? கிருஷ்ணசாமியின் கருத்தை விட்டுவிடுங்கள். கள்ளு குடித்திருக்கிறேன். அது விஷம் அல்ல.
தமிழினத்தின் மது 'கள்'
அது ஆடு ,மாடுகளில் இருந்து வரும் பால் போல், பனம் பால், தென்னம் பால், ஈச்சம் பால் ஆகியவை மூலிகை சாறா இல்லையா.. கள்ளு என்பது இயற்கை அருங்கொடை. கள்ளு என்று சொல்லாமல் மூலிகை சாறு என்று சொல்லுங்கள். இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வரத்தான் போகிறது. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு மது இருக்கிறது. ரஷ்யாவில் ஒயின், ஜின் இருப்பது போல் தமிழ்நாட்டிற்கு கள்.
தமிழ்நாட்டில் மட்டும் தடை
கள் என்பது உணவின் ஒரு பகுதி. அது மது அல்ல என்பதை அரசியல் சாசனம் கூறுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் கள் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. டாஸ்மாக் சாராய ஆலைகளை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டுமே நடத்தி வருகிறார்கள். உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் அவர்கள் தான்.
டாஸ்மாக் விற்பனைக்கு ஆபத்து
கள் இறக்க அனுமதி அளித்தால், டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடும் என்பதால், தடை விதித்துள்ளார்கள். நெல் எந்த மரத்தில் விளைகிறது என்று கேட்பதை போல்தான் ஆட்சியாளர்கள் கள் உருவாக்கப்படுவதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார்கள். கள் குடித்து உயிரிழந்தவர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்.. காரணத்தை விளக்கி கடிதம்.. அதிர்ச்சியில் வாசன்!











Click it and Unblock the Notifications