இந்தியாவையே ஆளும் பாஜகவுக்கு தில் இருந்தா தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? சீமான் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இந்தியாவையே ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தைரியம் இருந்தால் நாம் தமிழர் கட்சியைப் போல தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா? என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

Seeman Challenges BJP to contest alone in Tamilnadu Assembly Election?

பாஜகவை பொறுத்தவரையில் புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறது. முன்னர் கிரண்பேடி மூலம் இந்த முயற்சி நடைபெற்றது. இப்போது தமிழிசை செளந்தரராஜன் மூலம் முயற்சிக்கின்றனர்.

பாஜகவும் காங்கிரஸும் வெவ்வேறு அல்ல. இரண்டின் கொள்கைகளும் ஒன்றுதான். இந்த இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடுமே இல்லை.

இந்தியாவையே ஆளுகிற பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நாம் தமிழர் கட்சியைப் போல கூட்டணியே இல்லாமல் தமிழகத்தில் தனித்து போட்டியிட முன்வருமா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் அதிக வழக்குகள் போடப்பட்டன. அந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை.

இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+