Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவைகுண்டம் மாணவர் வெட்டப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க திருமாவளவன் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர் மீது 3 பேர் கொண்ட கும்பல் ஜாதி ரீதியாக கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரை விசிக தலைவர் நேரில் சந்தித்தார். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இதுபோன்ற வன்முறைகள் நடப்பதைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே அவற்றை கண்காணித்து தடுக்கும் வகையிலும் சிறப்பு புலானாய்வுப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தங்ககணேஷ் மகன் தேவேந்திரன். 17 வயதான இந்த மாணவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தேவேந்திரன் சில நாட்களுக்கு முன்பு ஆங்கில தேர்வு எழுதுவதற்காக அரியநாயகிபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்துள்ளார்.

Srivaikundam dalith student Thirumavalavan

அப்போது, கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் கும்பல் பேருந்தை வழிமறித்து ஏறியுள்ளனர். தேவேந்திரராஜை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தரையில் போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த தேவேந்திரராஜை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி ரீதியாக மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இதுபோன்ற வன்முறைகள் நடப்பதைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே அவற்றை கண்காணித்து தடுக்கும் வகையிலும் சிறப்பு புலானாய்வுப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும். எப்படி தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென க்யூ பிரிவு உள்ளதோ, அதேபோல சாதி மத அடிப்படையில் நடைபெறுகிற வன்கொடுமைகளை, வன்முறைகளை தடுக்க புலனாய்வுப் பிரிவை அமைக்க வேண்டும்.

மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை சார்பில் பரப்பப்பட்ட தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது. காதல் விவகாரத்தின் பின்னணியில்தான் மாணவர் தாக்கப்பட்டார் என்று காவல் துறையைச் சார்ந்தவர்களே ஆதாரமில்லாமல் எடுத்த எடுப்பிலேயே வதந்தியை பரப்பியுள்ளனர். காவல் துறையினரின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. யாரை காப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை.

கபடிப் போட்டியில் இந்த மாணவர் விளையாடிய குழுவினர் வெற்றி பெற்றதன் பின்னணியில் தான் இந்தப் பகை உருவாகியிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அந்த மாணவர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறான் என்கிற உண்மையை ஏன் திசை திருப்ப வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இப்படிப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு இந்த புலனாய்வு செய்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். அவர்கள் இந்த சம்பவத்தில் புலனாய்வு செய்தால் இதுபோல வதந்தியைப் பரப்பியவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது.

தென் மாவட்டங்களில் தொடர்ந்து இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடைபெறுகிறது என்பதை பலமுறை நாம் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். அதிகார வர்க்கத்தினர் ஏன் தலித் விரோத மனநிலையில் இயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே, இதில் நேரடியாக முதல்வர் தலையிட வேண்டும். அவருடைய கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து விசிக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாங்குநேரி சம்பவத்தில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆங்காங்கே நீதி கேட்டு கட்சியினர் களத்தில் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+